அபுதாபி ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்கள் உள்ளே..!!
அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் இந்த ஆண்டிற்கான சீசன் கடந்த நவம்பர் 17ஆம் தேதி அபுதாபியில் உள்ள அல் வத்பா பகுதியில் கோலாகலமாகத் தொடங்கியது. கோடைகாலத்தில் நடத்தப்படும் இந்த ஃபெஸ்டிவல் அனைத்து வயதினருக்கும் பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உறுதியளிக்கிறது.
நவம்பர் 17, 2023 முதல் மார்ச் 9, 2024 வரை சுமார் 114 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா, வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மாலை 4 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திருவிழாவில் நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 10 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் போன்றோருக்கு இலவச அனுமதியும் வழங்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க வாய்ப்பளிக்கும் இந்த திருவிழாவில் என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் எப்படி அங்கு செல்வது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இங்கே காணலாம்.
பறக்கும் கோப்பை (Flying Cup):
பறக்கும் கோப்பையின் மூலம், பார்வையாளர்கள் திருவிழாவின் செயல்பாடுகள் மற்றும் ஈர்ப்புகளை உயரத்தில் இருந்து 360 டிகிரி கோணத்தில் பறவைக் காட்சிளாகப் பார்க்க முடியும்.
அரேபிய குதிரை நிகழ்ச்சிகள் (Arabian Horse Shows)
எமிரேட்ஸ் அரேபிய குதிரை சங்கத்துடன் இணைந்து (Emirates Arabian Horse Association) குதிரைக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் குதிரை ஷோவை இங்கே பார்த்து ரசிக்கலாம்.
கேம்பிங் வில்லேஜ் (Camping Village):
கேம்பிங் செய்ய விரும்புபவர்களுக்காகவே கேம்பிங் வில்லேஜ் இங்கே திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 27, 2023 முதல் திறக்கப்படும் இந்த வில்லேஜில் ஒரு வேடிக்கையான வெளிப்புற அனுபவத்தை பார்வையாளர்கள் பெற முடியும், அத்துடன் திரைகளில் விளையாட்டு போட்டிகளும் இங்கே ஒளிபரப்பப்படும்.
குழந்தைகள் நகரம் (Children’s City):
பெயருக்கு ஏற்றார் போலவே, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான 30க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஒர்க் ஷாப்புகளும், 12 வெவ்வேறு நிகழ்வுகளும் இங்கே இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சிட்டியில் கேம்கள், கலை, முக ஓவியம் மற்றும் VR விளையாட்டுகள், இ-ஸ்போர்ட்ஸ் , நாடகம் மற்றும் திறமை போட்டிகளுக்கான சிறப்புப் பகுதியைக் கொண்டுள்ளது.
சீனா டவுன் (China Town):
இந்த ஆண்டு திருவிழாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சீன சந்தை, பல்வேறு சீன மற்றும் ஆசிய தயாரிப்புகளை வாங்கவும், ரசிக்கவும், ஆராயவும் வாய்ப்பை வழங்குகிறது.
ஃபன் ஃபேர் சிட்டி (Fun Fair City):
இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற சவாரிகள், விளையாட்டுகள் மற்றும் ஈர்ப்புகளை வழங்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாகும்.
கோ கார்டிங் போட்டி(Go Karting Competitions):
இந்த திருவிழாவில் குழந்தைகளுக்கான கோ கார்டிங் போட்டியும் இந்த ஆண்டு சீசனில் இடம்பெறுகிறது.
பேய் வீடு (Haunted Mansion):
த்ரில் அனுபவங்களைப் பெற விரும்புபவர்கள் அபுதாபியில் உள்ள மிகப்பெரிய எஸ்கேப் ரூமான ஹான்டட் மேன்சனுக்கு செல்லலாம்.
சர்வதேச நிகழ்ச்சிகள்:
பார்வையாளர்கள் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் தயாரிப்புகளை இந்த திருவிழாவில் ஆராய முடியும்.
ராணுவ பாரம்பரிய இசை நிகழ்ச்சி (Military heritage music show):
பிரபலமான ஷேக் சையத் திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இராணுவ வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், இராணுவ இசைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வனவிலங்கு ரகசியங்கள் சரணாலயம் (Wildlife Secrets Sanctuary):
இந்த திருவிழாவில் அரிய மற்றும் அழிந்துவரும் விலங்குகளைப் பற்றி அறிந்துகொள்ள அனுமதிக்கும் பிரத்யேக சரணாலயத்துடன், இயற்கை ஆர்வலர்களுக்கு நிறைய சலுகைகள் உள்ளன. அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை நீங்கள் பார்க்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.
உணவு விருப்பங்கள்:
பாரம்பரிய UAE உணவுப் பொருட்கள் முதல் தெரு உணவு மற்றும் சர்வதேச உணவு வகைகள் வரை பார்வையாளர்களுக்கு ஏராளமான உணவு மற்றும் பான விருப்பங்களும் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
ட்ரோன் நிகழ்ச்சிகள், வாராந்திர வானவேடிக்கை:
ஷேக் செயத் திருவிழாவில் சிறந்த ட்ரோன் காட்சிகளும் உள்ளன, அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 10 மணிக்கு இங்கு வானவேடிக்கை காட்சிகளும் இருக்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel