அமீரக செய்திகள்

அபுதாபியில் அமலுக்கு வரும் கிரீன் பாஸ் நடைமுறை குறித்த முழு விபரங்கள்..!!

அபுதாபியில் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கையான ‘கிரீன் பாஸ்’ நெறிமுறை ஜூன் 15 (நாளை) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

அதன்படி, பெரும்பாலான பொது இடங்களில் நுழைவதற்கு குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அல்ஹோஸ்ன் பயன்பாட்டில் கிரீன் பாஸைக் காட்ட வேண்டும்.

ஒரு குடியிருப்பாளர் அல்லது சுற்றுலாப் பயனர் எதிர்மறையான கோவிட் PCR சோதனை முடிவைப் பெற்ற பிறகு கிரீன் பாஸ் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் செல்லுபடியாகும் தன்மை தடுப்பூசி நிலையைப் பொறுத்து மாறுபடும்.

கிரீன் பாஸ், அதை எவ்வாறு செயல்படுத்துவது, செல்லுபடியாகும் நாட்கள் மற்றும் எந்தெந்த இடங்களில் கிரீன் பாஸ் தேவைப்படும் என்பதன் முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரீன் பாஸ் என்றால் என்ன?

உங்களின் கொரோனா தடுப்பூசி நிலை மற்றும் PCR சோதனை முடிவுகளின் அடிப்படையில் உங்கள் அல்ஹோஸ்ன் பயன்பாட்டில் பிரதிபலிக்கும் மூன்று வண்ண குறியீடுகளில் கிரீன் பாஸ் ஒன்றாகும்.

கிரீன், PCR சோதனை முடிவு எதிர்மறை என்பதைக் குறிக்கின்றது. மற்ற இரண்டு நிறங்களான க்ரே PCR செல்லுபடி முடிந்ததற்காகவும் மற்றும் சிவப்பு PCR சோதனை முடிவு நேர்மறையானது என்பதையும் குறிக்கும்.

எந்த இடங்களில் நுழைய கிரீன் பாஸ் தேவைப்படும்?

  • ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகள்
  • ஜிம்கள்
  • ஹோட்டல்கள்
  • பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள்
  • தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள்
  • பொழுதுபோக்கு மையங்கள்
  • சினிமாக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள்
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள்.

எனது கிரீன் பாஸை ஆக்டிவேட் செய்வது எப்படி? முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறதா?

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் முதல் தடுப்பூசிக்கான ஒரு டோஸ் கூட பெறாதவர்கள் வரை அனைவரும் கிரீன் பாஸைப் பெறலாம். எதிர்மறை PCR  சோதனை முடிவைப் பெற்ற பிறகு கிரீன் பாஸ் கிடைக்கும். இருப்பினும், இது செயலில் இருக்கும் காலம், உங்கள் தடுப்பூசி நிலையின் அடிப்படையில் வேறுபடுகிறது.

கிரீன் பாஸின் செல்லுபடியாகும் காலம் என்ன?

கிரீன் பாஸ் செல்லுபடியாகும் தன்மை நீங்கள் எந்த வகையின் கீழ் வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

  • முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்: இவர்கள் குறைந்தது 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸினைப் பெற்றவர்கள் அல்லது தடுப்பூசி சோதனைகளில் தன்னார்வலர்களாக இருப்பவர்கள். PCR சோதனையின் எதிர்மறை முடிவைப் பெற்று, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் 30 நாட்களுக்கு கிரீன் பாஸ் மற்றும் ஏழு நாட்களுக்கு E அல்லது  கோல்டன் ஸ்டார் ஐகானை தக்க வைத்துக் கொள்ளலாம்.
  • தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று 28 நாட்கள் பூர்த்தியடையாதவர்கள்: PCR சோதனை மேற்கொண்டு எதிர்மறை முடிவைப் பெற்றால், அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் 14 நாட்களுக்கு கிரீன் பாஸ் இருக்கும்.
  • முதல் டோஸை மட்டுமே பெற்றவர்கள்: இரண்டாவது டோஸ் போட காத்திருப்பவர்கள் PCR சோதனை முடிவின் மூலம் அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸில் ஏழு நாட்களுக்கு கிரீன் பாஸ் பெறலாம்.
  • இரண்டாவது டோஸை தாமதமாக போடுபவர்கள்: முதல் டோஸைப் பெற்று, இரண்டாவது டோஸ் பெற 48 நாட்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், எதிர்மறையான PCR சோதனை முடிவால், அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸ் மூன்று நாட்களுக்கு கிரீன் பாஸைப் பெறலாம்.
  • தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்: அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகளின்படி தடுப்பூசி விலக்கு சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு, எதிர்மறையான PCR சோதனை முடிவின் மூலம் அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸ் ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.
  • தடுப்பூசி போடாதவர்கள்: PCR சோதனை முடிவுக்குப் பிறகு மூன்று நாட்களுக்கு அல்ஹோஸ்ன் நிலையில் கிரீன் பாஸைப் பெறுவார்கள்.

எனது பாஸ் எவ்வாறு சரிபார்க்கப்படும்?

வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு கிரீன் பாஸை சரிபார்க்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மால் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு பாஸ் பெறுவது?

சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஒருங்கிணைந்த அடையாள எண் (UID) மூலம் அல் ஹொசன் அப்ளிகேஷனில் பதிவு செய்யலாம். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழையும் ஒரு நபரை அடையாளம் காண அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் பாஸ்போர்ட்டில் உள்ள நுழைவு முத்திரையில் (entry stamp) அல்லது விசா பக்கத்தில் UID ஐக் காணலாம். விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகளாலும் இதை வழங்க முடியும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!