அமீரக செய்திகள்

எமிரேட்டுகளுக்கு இடையே நீரில் பயணிக்க எலெக்ட்ரிக் ‘Sea Plane’..!! 10 விமானங்களை வாங்குவதற்கு கையெழுத்தான ஒப்பந்தம் ….

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் ஏர்ஷோ 2023இல் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் 19 இருக்கைகள் கொண்ட கடல் விமானத்தின் (seaplane) முன்மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் சீபிளேனை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த (Jekta) ஜெக்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, இது அமீரகம் போன்ற பெரு நகரங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மிகவும் நிலையான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஜெட்காவின் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஜேன் ஸ்டான்பரி அவர்கள் கூறுகையில், துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் 10 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்துடன், முதல் கடிதம் (LOI) கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ஜெட்கா முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் 19 இருக்கைகள் கொண்ட, பிராந்திய ஆம்பிபியஸ் பறக்கும் படகை (amphibious flying boat) உருவாக்குவதில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பறக்கும் படகு (Flying Boat) என்பது மேற்பரப்பில் மிதக்காமல் முழுவதுமாக அதன் உடற்பகுதியை நீருக்குள் தரையிறக்கும். இந்த சீபிளேனை ஏரி, கடல் அல்லது நதியாக இருக்கும் எந்த நீர்வழியிலும் தரையிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த கட்டணம்:

இந்த அதிநவீன சீபிளேன் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் என்பதால், இது எந்த உமிழ்வையும் வெளிவிடாது மற்றும் இயக்கச் செலவை 70 சதவீதம் வரை குறைக்கும். எனவே, பயணிகள் செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயணிக்கலாம், அதேசமயம் ஆபரேட்டர் இன்னும் கூடுதல் லாபம் ஈட்டலாம் என்று ஸ்டான்பரி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், இது வழக்கமான இயந்திரம் போல் அல்லாமல் இருப்பதால், இதை பராமரிக்க மிகவும் எளிதானது மற்றும் இதில் கார்பன் ஃபைபர் உள்ளதால் இயக்க செலவுகள் குறைவு என்று அவர் விவரித்துள்ளார்.

1990 மற்றும் 2022 க்கு இடையில், போக்குவரத்து உமிழ்வுகள் ஆண்டு சராசரி வளர்ச்சி 1.7 சதவீதம் பதிவாகியுள்ளது. எனவே, 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு (NZE) இலக்கை அடைய, 2030 வரை போக்குவரத்துத் துறையில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவை ஆண்டுக்கு 3 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த சீபிளேனின் முக்கிய நோக்கமே, பெரிய அளவிலான தண்ணீரால் பிரிக்கப்பட்ட மலேசியா பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற தீவு நாடுகளுக்கு இடையே மலிவான போக்குவரத்துச் சேவையை வழங்குவதாகும் என்று ஸ்டான்பரி கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!