துபாயில் வெளுத்து வாங்கிய கன மழையால் இதுவரை 20 விமான சேவைகள் ரத்து…

துபாயில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று என மோசமான வானிலை நிலவி வருவதால், இன்று (வெள்ளிக்கிழமை) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) வரும் மற்றும் புறப்படும் சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பிவிடப்பட்டதாக DXBயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அமீரக நேரப்படி காலை 10 மணி நிலவரப்படி, 13 உள்வரும் விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்றும் 6 வெளிச்செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் குறைக்க விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் DXB இல் உள்ள பிற சேவைப் பங்காளிகளுடன் துபாய் ஏர்போர்ட்ஸ் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், DXB க்கு செல்லும் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் அவ்வப்போது ட்ராஃபிக் அப்டேட்களைச் சரிபார்த்து நேரத்தைத் திட்டமிடுமாறும், முடிந்த வரை துபாய் மெட்ரோவைப் பயன்படுத்துமாறும் செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்கள் சமீபத்திய விமான அறிவிப்புகளுக்கு தங்கள் விமான நிறுவனத்துடன் நேரடியாகச் சரிபார்க்குமாறும் அல்லது https://dubaiairports.ae/ என்ற துபாய் ஏர்போர்ட்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel