அமீரக செய்திகள்

‘துபாய் ரன்’ நிகழ்வை முன்னிட்டு மூடப்படும் முக்கிய சாலைகள்.. குடியிருப்பாளர்களுக்கு RTA வழங்கிய அறிவுரை!!

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) ஷேக் சையத் சாலையை அதன் ஓட்டப்பாதையாக ஆக்கிரமிக்க உள்ள நிலையில், எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மெகா நிகழ்வுக்கான போக்குவரத்துத் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஷேக் சையத் சாலையைத் தவிர, துபாயில் உள்ள மற்ற முக்கிய வீதிகள் போக்குவரத்திற்கு மூடப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

துபாய் ரன் நிகழ்வின் போது, மூடப்படும் மற்றும் திறக்கப்பட்டு இருக்கும் சாலைகள் பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு துபாயின் முக்கிய சாலைகள் மூடப்படும் என்பதால், பொது மக்கள் அன்றைய தினம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நோல் கார்டுகளில் குறைந்தபட்சம் 15 திர்ஹம்களை ஒரு சுற்றுப் பயணத்திற்கு வைத்திருக்குமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

‘Mai Dubai ‘ வழங்கும் துபாய் ரன் 2023 நிகழ்வு முன்னெப்போதையும் விட பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு துபாய் ரன்னில் 193,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!