UAE: பாலைவனத்தில் கேம்பிங் செய்யும் நபர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன…??
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது குளிர்கால வானிலை நிலவி வருவதால் குடியிருப்பாளர்கள் குளிர்கால வானிலையை அனுபவிக்க வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் பாலைவனத்தில் நேரத்தை கழிப்பதை சிலர் செல்வதுண்டு. அதே போல் இந்த காலத்தில் பாலைவனத்திற்கு கேம்பிங் செல்வதையும் சிலர் விரும்புகின்றனர். இவ்வாறு கேம்பிங்கை விரும்பும் பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், அங்கு கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
நாட்டின் ஏழு எமிரேட்டுகளும் கேம்பிங், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், டூன்ஸ் பாஷிங் ஆகியவற்றிற்காக நியமிக்கப்பட்ட இடங்களை நிறுவியுள்ளன. அந்த கேம்பிங் பாலைவனங்களை ஒவ்வொரு குளிர்காலத்திலும், தங்களுடைய பாதுகாப்பிற்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் இடையூறு விளைவிக்காமல், குடியிருப்பாளர்கள் பொறுப்புடன் அனுபவிப்பதை உறுதிசெய்வதை அதிகாரிகள் முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக பாலைவனத்திற்கு கேம்பிங் வருபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு குப்பைகளை விட்டுச் செல்வதுதான் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலர் அதிகாலை 2 மணி வரை உரத்த ஒலிகளை எழுப்பி அமைதியான நேரங்களை சீர்குலைப்பார்கள் என்றும், இவ்வாறு முகாமிடுபவர்கள் விதிமுறைகள் பற்றி அறியாமல், தற்செயலான விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மீறல்கள் அடுத்தடுத்த அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர்கள் பின்வரும் விதிகளின் பட்டியலைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்:
- குப்பை கொட்டுவதற்கு ஷார்ஜாவில் 2,000 திர்ஹமும், துபாய் மற்றும் ராஸ் அல் கைமாவில் 500 திர்ஹமும் அபராதம் விதிக்கப்படும்.
- ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா ஆகிய இரண்டு எமிரேட்டிலும் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் கேம்பிங்சென்றால் 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
- தரையில் நெருப்பு மூட்டினால் 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். RAK – ஜபெல் ஜெய்ஸில் 500 திர்ஹம்
- தரையிலேயே சமையல் செய்தால் 2,000 திர்ஹம் அபராதம்.
- வாகனங்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவுகளுக்கு 2,000 திர்ஹம்.
- கடற்கரைகள், பசுமையான பகுதிகள் மற்றும் பூங்காக்கள் போன்ற நியமிக்கப்படாத இடங்களில் பார்பிக்யூ மற்றும் கிரில்லிங் செய்தால் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
- 10,000 திர்ஹம்- புற்களை அகற்றுதல், மரங்களை வெட்டுதல் அல்லது ஒரு பகுதியில் இருந்து மணலை அகற்றுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துதல்
- 5,000 திர்ஹம்- பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைதல்
- 15,000 திர்ஹம்- பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வேட்டையாடுதல்
- 1,000 திர்ஹம்- தவறாக பார்க்கிங் செய்தல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் (RAK – Jebel Jais)
இவை தவிர, நாட்டிலுள்ள பல கேம்பிங் பகுதிகளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் குறிக்கும் தெளிவான வழிகாட்டி பலகைகள் உள்ளன.
செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- தாவரங்களை சேதப்படுத்துவதையோ அல்லது நெருப்பை மூட்டுவதற்கு அவற்றை பயன்படுத்துவதையோ தவிர்க்கவும்
- அல் குத்ரா ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் மீன்கள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம்
- லவ் ஏரி மற்றும் எக்ஸ்போ ஏரி போன்ற நீர்நிலைகளில் நீந்த வேண்டாம்
- பாலைவனத்தில் குப்பைகளை வீச வேண்டாம்
- உரத்த இசையை இயக்க அனுமதி இல்லை
- குப்பை பைகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது
- பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளுக்கு ஒத்துழைத்து அமீரகத்தில் வசிப்பவர்கள் கேம்பிங் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel