UAE: ஒவ்வொரு மாதமும் 2,500 திர்ஹம்ஸ் பரிசு..!! எமிரேட்ஸ் போஸ்ட் நடத்தும் ஃபோட்டோகிராஃபி போட்டி!! ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்பது எப்படி…??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து புகைப்படக் கலைஞர்களும் ஒவ்வொரு மாதமும் 2,500 திர்ஹம் மற்றும் பிற பரிசுகளை வெல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. அமீரகத்தில் இயங்கி வரும் எமிரேட்ஸ் போஸ்ட், போஸ்டல் போர்ட்ரெய்ட்ஸ் போட்டோகிராபி போட்டி (Postal Portraits Photography Competition) என்ற போட்டியை சனிக்கிழமை தொடங்கி வைத்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து நாட்டினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அமீரகத்தின் கலாச்சார நிலப்பரப்பை வரையறுக்கும் பலதரப்பட்ட வாழ்க்கை முறையின் மாறும் காட்சியை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, இதில் பங்கேற்கும் புகைப்படக் கலைஞர்கள், அமீரகத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்ட கட்டிடங்கள், முத்திரைகள், அஞ்சல், அஞ்சல் பெட்டிகள், கடிதங்கள், பேக்கேஜ்கள், வேன்கள் அல்லது அஞ்சல் அட்டைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை படம் பிடிப்பதற்கும், இதில் சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்குமான எங்களின் அர்ப்பணிப்பை இந்த முன்முயற்சி வெளிப்படுத்துகிறது என்று எமிரேட்ஸ் போஸ்ட் சனிக்கிழமை கூறியுள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து புகைப்பட ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கு சில அளவுகோல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்று எமிரேட்ஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:
- ப்ரொஃபஷனல் பயன்பாட்டிற்கான உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் லே-அவுட்களில் குறைந்தபட்சம் 3,000 பிக்சல்கள் இருக்க வேண்டும்.
- அனைத்து புகைப்படங்களும் டிஜிட்டல் வடிவில் இருக்க வேண்டும், அவற்றில் வாட்டர்மார்க் எதுவும் இருக்கக்கூடாது மற்றும் அதிகமாக எடிட் செய்திருக்கக் கூடாது.
- ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு மாதத்திற்கு 3 புகைப்படங்கள் வரை, வண்ணத்தில் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சமர்ப்பிக்கலாம்.
- பங்கேற்பாளரின் Instagram பக்கத்தில் #PostalPortraits என்ற ஹேஷ்டேக்குடன் புகைப்படங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாத இறுதியிலும் புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் வெற்றியாளர்கள் அதற்கு அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்கள்.
பரிசுகள்:
ஒவ்வொரு மாதமும், மிகவும் தனித்துவமான புகைப்படத்தை சமர்ப்பிக்கும் பங்கேற்பாளருக்கு 2,500 திர்ஹம் ரொக்கத் தொகையும், பலவிதமான பரிசுகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பொருள் (theme)
- அக்டோபர்-டிசம்பர் 2023: எமிரேட்ஸ் போஸ்டின் கட்டிடக்கலை மற்றும் வெளிப்புறங்களை படம் பிடித்தல். (குறிப்பு: உட்புற இடங்களை எடுக்க வேண்டியது இல்லை)
- ஜனவரி-மார்ச் 2024: அமீரகத்தில் உள்ள போஸ்ட்டின் உங்கள் சொந்த கதையை படங்கள் மூலம் தெரிவிக்கவும்.
- ஏப்ரல்-ஜூன் 2024: எமிரேட்ஸ் போஸ்ட் இருக்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களின் தருணங்கள். (குறிப்பு: இது உண்மையான வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டியதில்லை)
- ஜூலை-செப்டம்பர் 2024: எமிரேட்ஸ் அஞ்சல் முத்திரைகள் மற்றும் அஞ்சல் அட்டைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்துதல்.
எப்படி சமர்ப்பிப்பது?
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் தொடங்கி, மாதத்தின் கடைசி நாளில் சமர்ப்பிப்புகள் முடிவடையும். எமிரேட்ஸ் போஸ்டின் சமூக ஊடக சேனல்களில் வெற்றியாளர்கள் மாதந்தோறும் அறிவிக்கப்படுவார்கள். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் மேலும் தகவல் மற்றும் சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்களுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel