அமீரக செய்திகள்

புதிய வார விடுமுறை: அபுதாபியில் இயக்கப்படவிருக்கும் கூடுதல் பேருந்து சேவைகள்…!!

அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய வார விடுமுறைக்கேற்ப அபுதாபியில் உள்ள நகராட்சி போக்குவரத்து ஆணையம் பேருந்து சேவைகளில் புதிய சேவைகளை கூடுதலாக இணைத்துள்ளது. அத்துடன் நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயங்கும் சில பேருந்து வழித்தடங்களையும் மாற்றியுள்ளது.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) இது பற்றி கூறுகையில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், புதிய சனி-ஞாயிறு வார இறுதி விடுமுறைக்கு ஏற்பவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து பயணங்கள் (trips), வேலை நாட்கள் மற்றும் புதிய வார இறுதி மாற்றத்தின்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ITC தெரிவித்துள்ளது.

இதன்படி வார நாட்களில் கூடுதலாக அறுபது தினசரி பேருந்து பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தினசரி பயணங்களின் எண்ணிக்கை 4,695 இலிருந்து 4,755 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை 753 கூடுதல் பயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் தினசரி பயணங்களின் எண்ணிக்கை 4,002 இல் இருந்து 4,775 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அபுதாபி நகரில் உள்ள சையத் போர்ட்டில் இருந்து அல் பதீன் பகுதிக்கு புறப்படும் பேருந்து எண் 8, அல் பதீன் மெரினா பகுதி வரை நீட்டிக்கப்படும்.

அத்துடன் பனியாஸ், அல் ஷஹாமா மற்றும் முசாஃபாவின் பேருந்து நெட்வொர்க்கிலும் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்து எண்கள் 400, 401, 402 மற்றும் 403 இனி அல் ஷஹாமாவுக்கு இயக்கப்படாது. அதற்கு பதிலாக, அபுதாபி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கும் இரண்டு புதிய சேவைகளான பேருந்து எண் 201 அல் ஷஹாமா சூக் மற்றும் பேருந்து எண் 202 ரஹ்பா மருத்துவமனைக்கு இயக்கப்படும்.

மேலும், 225 என்பது Deerfields Mall மற்றும் Al Taweelah இடையே இயக்கப்படும் ஒரு புதிய பேருந்து சேவையாகும். மேலும் பேருந்து எண் A40 அல் ஷஹாமா பேருந்து நிலையம் வரை நீட்டிக்கப்படும்.

முசாஃபாவில் புதிய பேருந்து சேவை இப்போது மேற்கு துறைமுகப் பகுதியை (western port area) இணைக்கும். மேலும், முகமது பின் சையத் சிட்டி மற்றும் ஷேக் ரஷித் பின் சையத் அல் மக்தூம் ஸ்ட்ரீட் இடையே நேரடி இணைப்பு இருக்கும்.

ITC கூறுகையில், “இந்த மேம்பாடுகள் அபுதாபியில் பொது பேருந்து நெட்வொர்க்கின் இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பேருந்துகளின் பயன்பாட்டை மிகவும் திறமையாகவும், எளிதாகவும், வசதியாகவும் மாற்றும்” என்று தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!