அமீரக செய்திகள்

குடும்பமாக சுற்றுலா செல்ல உலகின் மிகச்சிறந்த நகரங்களில் முதலிடம் பிடித்த துபாய்..!!

உலகளவில் மக்கள் வசிக்கவும் சுற்றுலா செல்வதற்கும் உகந்த பாதுகாப்பான இடமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கும் துபாய் நகரமானது மற்றுமொரு சிறப்பை பெற்றுள்ளது. பயணக் காப்பீட்டு ஒப்பீட்டுத் தளமான InsureMyTrip வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டில் விடுமுறை காலத்தில் குடும்பமாக செல்வதற்கு சிறந்த இடமாக துபாய் தரப்படுத்தப்பட்டுள்ளது.

துபாயில் இருக்கக்கூடிய குடும்ப ஹோட்டல்களின் தரம், அருகிலுள்ள கடற்கரைகளின் தரம், குடும்பத்தை ஈர்க்கும் இடங்களின் அளவு, கடலின் வெப்பநிலை, குறைந்த அலைநீளம், பலவீனமான கடல் நீரோட்டம் மற்றும் பகுதி பாதுகாப்பு ஆகியவை இந்த கணக்கெடுப்பில் அடங்கும்.

பகுதி பாதுகாப்பு (10), குடும்ப ஈர்ப்புகளின் தரம் (10), பலவீனமான கடல் நீரோட்டம் (9.75) மற்றும் கடல் வெப்பநிலை (7.7) உட்பட ஏழு பிரிவுகளில் ஐந்தில் துபாய் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதன்மையில் உள்ளது.

InsureMyTrip வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபாய் பல்வேறு தீம் பார்க்குகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் குடும்பத்திற்கு ஏற்ற அதிசய உலகமாக மாறி வருகிறது. இது உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சமீபத்தில் டிரிப் அட்வைசர் டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகள் 2022 இல் “சிறந்த உலகளாவிய இடமாக” தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒப்பீட்டு தளத்தின் கணக்கெடுப்பில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 62 நகரங்களில், துபாய் 10 இல் 7.42 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கொழும்பு (6.71), டர்க்ஸ் & கெய்கோஸ் (Turks & Caicos) (6.48), பார்படாஸ் (Barbados) (6.37) மற்றும் கோர்பு (korfu) (6.27) ஆகியவை உள்ளன.

ஃபூகெட் (Phuket), ஆக்லாந்து (Auckland), ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) மற்றும் ஹவானா (Havana) ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த மற்ற நகரங்கள் ஆகும். மியாமி, USA (3.54 மதிப்பெண்) குடும்ப விடுமுறைக்கு மிகவும் பொருத்தமான இடங்களின் தரவரிசையில் கடைசி இடங்களை பிடித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!