யூனியன் தின விடுமுறையில் துபாய் மெட்ரோ, பேருந்து, டிராம் இயங்கும் நேரங்களை வெளியிட்ட RTA.. இலவச பார்க்கிங்கும் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தினத்தைக் கொண்டாடி வருகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு சில எமிரேட்கள் அபராதத்தில் 50 சதவீதத் தள்ளுபடியை அறிவித்துள்ள நிலையில், துபாயில் யூனியன் தின விடுமுறைக்கு இலவச பொது பார்க்கிங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் 2 சனிக்கிழமை முதல் டிசம்பர் 4 திங்கட்கிழமை வரை குடியிருப்பாளர்கள் பொது பார்க்கிங்கை இலவசமாக அணுகலாம். மேலும், இது மல்டி-லெவல் டெர்மினல்களைத் தவிர அனைத்து பொது பார்க்கிங் மண்டலங்களுக்கும் பொருந்தும். மீண்டும் டிசம்பர் 5, 2023 செவ்வாய் அன்று பார்க்கிங் இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.
அத்துடன் யூனியன் தின விடுமுறையின் போது, வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், பொது பேருந்துகள், துபாய் மெட்ரோ மற்றும் டிராம், கடல் போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்குநர் மையங்கள் போன்ற அனைத்து சேவைகளுக்கான வேலை நேரத்தையும் RTA வெளியிட்டுள்ளது.
சேவை வழங்குநர் மையங்கள் (வாகன சோதனை)
RTAவின் படி, டிசம்பர் 2, யூனியன் தின விடுமுறையின் போது சேவை வழங்குநர் மையங்கள் மூடப்படும் மற்றும் டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மையங்களிலும் பரிவர்த்தனைகள் மீண்டும் தொடங்கும். இருப்பினும், பின்வரும் மையங்களில் மட்டும் வாகனங்களின் தொழில்நுட்ப ஆய்வு சேவைகள் மட்டும் டிசம்பர் 4 திங்கள் அன்று மீண்டும் தொடங்கும். அவை,
- தஸ்ஜில் அல் திவார்
- ஆட்டோ ப்ரோ சத்வா
- ஆட்டோ ப்ரோ அல் மன்கூல்
- தஸ்ஜில் அல் அவிர்
- அல் யாலாயிஸ்
வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்
துபாயில் விடுமுறை நாட்களில், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் மூடப்படும். இருப்பினும் உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் கிஃபாஃப் மற்றும் RTAவின் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் 24 மணி நேரமும் வழக்கம் போல் செயல்படும்.
துபாய் மெட்ரோ
நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, ரெட் மற்றும் கிரீன் லைன் சேவை பின்வருமாறு செயல்படும்
-காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை
துபாய் டிராம்
தேசிய தினத்தை முன்னிட்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் டிராம் இயக்கப்படும்.
பொது பேருந்துகள்
டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை, பின்வரும் பேருந்து வழித்தடங்கள் ஷேக் சையத் சாலையில் (அபுதாபியை நோக்கி மட்டும்) திருப்பி விடப்படும்: அவை,
10, 15, 21, 7, 8, 83, 91, E101, 98E, 96, 95A, 95, 91A , X94, X92, E102.
இந்த வழித்தடங்களில் காலை 6.30 மணி முதல் 11 மணி வரை திருப்பி விடப்படும் காலத்தில் பேருந்து சேவையில் தாமதம் ஏற்படும், மேலும் சில பயணங்கள் ரத்து செய்யப்படும். குறிப்பிடப்பட்ட தேதிகள் மற்றும் காலத்தில் குறிப்பிடப்பட்ட பேருந்து வழித்தடங்களின் நிறுத்தங்கள் மூடப்படும்.
மற்ற வழித்தடங்களில் கீழ்க்கண்டவாறு சேவைகள் இயல்பாக இருக்கும்:
- திங்கள் முதல் வியாழன் வரை காலை 4.30 முதல் 12.30 வரை (அடுத்த நாள்)
- வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 12.30 வரை (அடுத்த நாள்)
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 1 மணி வரை (அடுத்த நாள்).
எவ்வாறாயினும் மெட்ரோ இணைப்பு பேருந்து சேவையின் சேவை நேரம், மெட்ரோ இயங்கும் நேரங்கள் மற்றும் அதன் பயணங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இயக்கப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel