அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்கெனவே துபாய் மற்றும் அபுதாபியில் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது ஷார்ஜா முனிசிபாலிட்டியும் இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளது.
ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளதன்படி டிசம்பர் 2 சனிக்கிழமை முதல் டிசம்பர் 4 திங்கள் வரை பொது வாகன நிறுத்தம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான கட்டண பார்க்கிங் முறை டிசம்பர் 5 செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டணத்திற்கு உட்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு இது பொருந்தாது என்றும், மேலும் இவை நீல நிற பார்க்கிங் அறிகுறிகளால் அடையாளம் காணப்படும் என்றும் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel