அமீரக செய்திகள்

அமீரகத்தில் வசிப்பவர்களின் பாஸ்போர்ட் புதிப்பித்தல் தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டவர்களில் ஏற்கனவே காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் அல்லது ஜனவரி 31, 2021 ஆம் ஆண்டுக்குள் காலாவதியாகக் கூடிய நிலையில் இருக்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் மட்டுமே தற்சமயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பானது, மறு அறிவிப்பு வரும் வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர பாஸ்போர்ட் சேவை தேவைப்படுபவர்கள், தங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும், தங்களின் அவசரநிலை பற்றிய விவரங்களையும் மின்னஞ்சலில் விளக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தூதரகத்திற்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்து தேவையான சேவையை இந்திய தூதரகம் வழங்கும் என்றும் தூதரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் இந்திய தூதரகம், ஊழியர்களின் சார்பாக அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் PRO களே பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதித்த மற்றொரு ஆலோசனையையும் பகிர்ந்து கொண்டது. அத்துடன் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பங்களை செயலாக்கும் அவுட்சோர்ஸ் நிறுவனமான பி.எல்.எஸ் இன்டர்நேஷனலில் விண்ணப்ப செயல்முறைகளையும் திருத்தி அமைத்திருந்தது.

இதற்கு முன்னர், அமீரகத்தில் பணிபுரியும் இந்திய நாட்டவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அருகிலுள்ள பி.எல்.எஸ் மையத்தில் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், தொற்றுநோய் நிலைமை தனிநபர்களின் நடமாட்டத்தில் சிரமத்தை உருவாக்கியுள்ளதால், குறிப்பாக தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் நிறுவனத்தை சார்ந்த PRO கள் மூலம் விண்ணப்பங்களை செயலாக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!