அமீரக செய்திகள்

துபாய்: ஃபெர்ரி மற்றும் அப்ராவில் சவாரி செய்தவாறே புத்தாண்டு வான வேடிக்கைகளை ரசிக்க வாய்ப்பு..!! சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ள RTA..!!

துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வானவேடிக்கைகள் வானை அலங்கரிப்பதை, மக்கள் நீரில் மிதந்தவாறே ஃபெர்ரி, அப்ராவில் இருந்து பார்த்து ரசிக்கும் பிரத்யேக அனுபவத்தைப் பெற விரும்புபவர்களுக்கு RTA அது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான தனது சிறப்புச் சலுகைகள் மற்றும் பிரீமியம் கடல் போக்குவரத்து சேவைகளை வெளியிட்டுள்ளது.

2023 முடிந்து 2024 தொடங்கும்போது, எமிரேட்டின் கடற்கரைப் பகுதியில் துபாய் ஃபெர்ரி, ஆப்ரா அல்லது வாட்டர் டாக்ஸியில் மிதந்தவாறே , கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை RTA வழங்குகிறது. RTAவின் இந்தச் சேவையை எப்படி, எங்கே அணுகுவது மற்றும் நேர அட்டவணைகள் போன்ற விவரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

சேவையைப் பெறுவது எப்படி?

நீங்கள் 8009090 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமாகவோ, [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ இந்த சேவையைப் பெறலாம்.

துபாய் ஃபெர்ரி

மெரினா மால் ஸ்டேஷன் (துபாய் மெரினா), குபைபா ஸ்டேஷன் அல்லது ப்ளூவாட்டர்ஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் சவாரி தொடங்கப்படும்.

நேரம்: புத்தாண்டு தினத்தன்று இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை சவாரிகள் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை 1.30 மணி வரை தொடரும்.

கட்டணம்:

RTA, 2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு சேவைக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது மற்றும் 2 வயதுக்கு குறைவானவர்களுக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்கள் சில்வர் கேபினிற்கு 350 திர்ஹம்சும், கோல்டு கேபினிற்கு 525 திர்ஹம்சும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அப்ரா

அல் ஜதாஃப் நிலையம், அல் ஃபாஹிதி நிலையம் அல்லது அல் குபைபா மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம் ஆகியவற்றில் அப்ரா சேவை கிடைக்கும்.

நேரம்: பயணங்கள் இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை தொடங்கி மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.

கட்டணம்: பெரியவர்களுக்கு 150 திர்ஹம்ஸ் மற்றும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்

வாட்டர் டாக்ஸி:

மெரினா மால் நிலையத்தில் (துபாய் மெரினா) பயணம் தொடங்குகிறது.

நேரம்: பயணங்கள் இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை தொடங்கி மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு முடிவடையும்.

கட்டணம்:  3,750 திர்ஹம் மற்றும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக சவாரி செய்யலாம்.

வாட்டர் டாக்ஸி மற்றும் அப்ரா:

பயணங்கள் இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை தொடங்கி அதிகாலை 1.30 மணிக்கு (அடுத்த நாள்) முடிவடையும். இது மெரினா மால் நிலையத்தில் (துபாய் மெரினா) தொடங்குகிறது. ஒரு நபருக்கு அப்ரா கட்டணம் 150 திர்ஹம் மற்றும் முழு வாட்டர் டாக்ஸியையும் முன்பதிவு செய்ய 3,750 திர்ஹம் ஆகும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக சவாரி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!