அமீரக செய்திகள்

“அமீரகத்தை தங்கள் நாடாக கருதும் அனைவருக்கும் பாராட்டுகள்”.. தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகம் தனது 52வது யூனியன் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், அமீரக ​​ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ஜனாதிபதி ஷேக் முகமது ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு தனது நன்றியையும் போற்றுதலையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நாட்டு மக்களே தேசத்தின் தூண்கள் மற்றும் பலம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தை தங்கள் வீடு என்று அழைக்கும் மற்றும் நாட்டின் கூட்டு முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

“உங்களைப் பெற்றதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்,” என்று கூறிய ஷேக் முகமது, நாட்டு மக்களின் அசைக்க முடியாத ஆதரவுடன் தேசம் என்றென்றும் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உண்மையான செல்வம் அதன் வளங்களில் மட்டுமல்ல, மிக முக்கியமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களிடமும் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஐக்கிய அரபு அமீரக யூனியனின் ஆண்டுவிழா நாட்டின் நிகழ்காலத்தை அதன் கடந்த காலத்துடன் இணைக்கும் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தின் பார்வையை வழங்கும் ஒரு சந்தர்ப்பமாகும் என்று கூறியுள்ளார்.

52 வது யூனியன் தினத்தை முன்னிட்டு, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமீ்ரகத்தின் சுப்ரீம் கவுன்சில் மற்றும் ஆட்சியாளர்கள் அத்துடன் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் துபாய் ஆட்சியாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதே போல் அமீரகத்தில் இருக்கும் மற்ற எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் மற்ற தலைவர்களும் தொடர்ந்து தங்களது தேசிய தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!