UAEக்கு வருகை தரும் மருத்துவர்களுக்கு 3 மாத பயிற்சி அனுமதியை அறிமுகம் செய்த துபாய்!! துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு….

ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்காக வருகை தரும் மருத்துவர்களை அனுமதிக்க துபாய் குறுகிய கால மூன்று மாத பயிற்சி அனுமதியை (permit to practice) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நடைபெற்று வரும் அரபு சுகாதார காங்கிரஸ் 2024 இல் (Arab Health Congress 2024) இன்று புதன்கிழமையன்று அறிவித்த துபாய் சுகாதார ஆணையம் (DHA), இந்த முயற்சி உள்ளூர் சுகாதாரத் துறையை அவசரநிலைகள், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளைக் கையாள்வதில் பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொழில் பயிற்சி செய்வதற்கான தற்காலிக அனுமதிகளை வழங்குவதன் மூலம், துபாயில் உள்ள சுகாதார இடங்களை சுகாதார நிபுணர்களுக்கான அவர்களின் தேவையை நிறைவேற்றவும் மருத்துவ நிபுணத்துவத்தை அணுகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், DHA இன் சுகாதார ஒழுங்குமுறைத் துறையின் CEO டாக்டர் மர்வான் அல் முல்லா அவர்கள், அனுமதியைப் பெறுவது, அதே துறையில் ஒரு தொழில்முறை உரிமத்தைப் பிற்காலத்தில் பெறுவதற்கு தானாகவே உத்தரவாதம் அளிக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அதாவது, ஒருங்கிணைந்த தொழில்முறை தகுதி வழிகாட்டியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்து குறிப்பிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரு தொழில்முறை உரிமத்தை பெறுவது என்ற நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel