அமீரக செய்திகள்

துபாய் முழுவதும் தெரு விளக்குகள் அமைக்கும் புதிய திட்டம்!! 278 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் முக்கிய சாலைகளில் தெரு விளக்குகள் நிறுவப்படும் என RTA தகவல்…..

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), சாலைப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 278 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் சாலைகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

துபாயின் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, எமிரேட் முழுவதும் 40 பகுதிகளில் மேற்கொள்ளப்படும் துபாயின் தெருவிளக்கு திட்டம் 2023-2026, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் துபாயின் வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

முதலாவதாக மிர்திஃப், அல் பராஹா, ஓத் மெத்தா, அல் வஹதா, அல் ஹுதைபா, அல் சத்வா, அபு ஹைல் மற்றும் அல் பதா, அத்துடன் உம் சுகீம் 1, 2 மற்றும் 3, அல் சஃபா 1 மற்றும் 2, அல் மனாரா, அல் மரியால் ரிசர்வ் ஸ்ட்ரீட், அல் மின்ஹாத் விமான தளத்திற்கான சாலை மற்றும் ஜுமேராவில் உள்ள தெரு மற்றும் பார்க்கிங் பகுதிகள் போன்ற முன்பு எரியாத பகுதிகளில் தெரு விளக்குகள் நிறுவப்படும் என்று RTA தெரிவித்துள்ளது.

மேலும், உம் அல் ஷீஃப், அல் சுஃபு 1, அல் குவோஸ் குடியிருப்பு பகுதிகள் 1 மற்றும் 3, நாட் அல் ஹமர் மற்றும் அல் அவிர் 2 ஆகிய இடங்களில் தெரு விளக்குகள் நிறுவப்படும் இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டில் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

அதையடுத்து 2026 ஆம் ஆண்டில், அல் கர்ஹூத், அல் த்வார், ஹஸ்யான், அல் ஜாஃபிலியா, அல் மர்மூம், அல் குசைஸ் 1 மற்றும் 2, நாட் அல் ஷெபா 1, அல் வார்சன் 2, ஹிந்த் சிட்டி, பிசினஸ் பே, உம் ரமூல், ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதி 1 மற்றும் 2, மற்றும் ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதி 3 போன்ற பகுதிகளில் உள்ள பல்வேறு தெருக்கள் மற்றும் பார்க்கிங்கில் தெரு விளக்குகள் நிறுவப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இந்தப் பகுதிகளின் தேர்வு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள், போக்குவரத்து அளவுகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் வேகத்தை கவனமாக பரிசீலிப்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது என்று RTA வின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் தயர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் மற்றும் பார்வையாளர்களின் நலன் மற்றும் திருப்திக்கு பங்களிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், புதிய விளக்கு அமைப்புகள் அமீரகத்தின் காலநிலைக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் மற்றும் நிலையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் நுகர்வில் 55 சதவீதம் குறைப்பு மற்றும் ஆயுட்காலம் 173 சதவீதம் அதிகரிப்பை வழங்கும் LED தொழில்நுட்பம் இதில் அடங்கும் என்று அல் தயர் மேலும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டில்அல் குசைஸ் தொழில்துறை பகுதிகள் 1 முதல் 5 வரை, அல் லுசைலி மற்றும் லஹ்பாப் 1 மற்றும் 2 ஆகியவற்றிற்கான தெரு விளக்கு திட்டத்தை வடிவமைக்கும் பணியைத் தொடங்கியதாகவும், இப்போது அவை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, துபாயின் சாலைகளில் 14,000 க்கும் மேற்பட்ட விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளுடன் மாற்றப்பட்டதாகவும், அவற்றில் 39 சுரங்கங்கள் மற்றும் கிராசிங்குகள், 22.6கிமீ சாலைவழி வெளிச்சம் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!