DXB: தொலைந்து போன லக்கேஜ்களை விற்பதாக கூறி மோசடி… விமான நிலையம் அளித்துள்ள எச்சரிக்கை..!!

துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) தொலைந்து போன லக்கேஜ்களை விற்பதாகக் கூறும் போலியான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களுக்கு எதிராக மோசடி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பயணிகளுக்கு வழங்கப்பட்ட மோசடி எச்சரிக்கையில், “இத்தகைய செயலை நாங்கள் செய்ய மாட்டோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விமான நிலையத்திற்கு பயணத்திற்காகவே வந்துள்ளோம், பறிப்புக்காக அல்ல. மேலும், சந்தேகத்திற்கிடமான தளங்களை நீங்கள் கண்டால், கவனமாக இருங்கள், அவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம்” என்று DXB அறிவுறுத்தியுள்ளது.
DXB இல் பேக்கேஜ் கையாளப்படும் விதம்:
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள விமான நிலையம் DXB ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள மூன்று டெர்மினல்களிலும் சாதனை எண்ணிக்கையிலான லக்கேஜ்கள் கையாளப்படுகிறது.
DXB இல் லக்கேஜ்களை கையாள்வதற்கு உதவும் dnata வெளியிட்ட தரவுகளின் படி, 2022ஆம் ஆண்டில் அதன் டெர்மினல்கள் மூலம் 82 மில்லியன் பைகள் கையாளப்பட்டதாகக் கூறப்படுகிறது. dnata, DXB இலிருந்து 250 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பயணிக்கும் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு, சரியான பொருட்களை சரியான நேரத்தில் சரியான விமானத்தில் ஏற்றுவதை உறுதி செய்கிறது.
முக்கியமாக, பீக் நேரம் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில், ஒவ்வொரு லக்கேஜையும் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய 1,300க்கும் மேற்பட்ட dnata ஊழியர்கள் வேலை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் DXBயின் பேக்கேஜ் ஹேண்ட்லிங் சிஸ்டம் (BHS) புதுமையான கன்வேயர் பெல்ட்கள் மற்றும் புறப்படும் மற்றும் வரும் பைகளை நகர்த்தும் லிஃப்ட்களைப் பயன்படுத்தி லக்கேஜ்களை எடுத்துச் செல்கிறது. டெர்மினல் 3 இன் கான்கோர்ஸ் தளங்களின் கீழ் மட்டும், 160 கிமீ பேக்கேஜ் டிராக்குகள் இயங்குகின்றன.
தொலைத்த லக்கேஜ்களை எப்படி புகார் அளிப்பது?
பயணிகள் தங்கள் லக்கேஜ்களை விமான நிலைய டெர்மினல்களில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் சர்வீஸ் டெஸ்கில், பேக்கேஜ் க்ளைம் பகுதிக்கு அருகில் உள்ள பேக்கேஜ் சர்வீஸ் டெஸ்கில் புகார் அளிக்கவேண்டும்.
உங்கள் பைகள் உங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தனிப்பட்ட குறிப்பு எண் மூலம் கண்காணிக்கப்படும்.
காணாமல் போன பைகள் குறித்த அறிக்கையில் முடிந்தவரை சாமான்களைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.
கடைசியாக, லக்கேஜ் கண்டுபிடிக்கப்பட்டதும், டெலிவரி நேரத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன், பயணி உரிய முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel