அமீரக செய்திகள்

ஆசையாக முதல்முறை குடும்பத்தை துபாய்க்கு அழைத்து வந்த இந்தியர்!! முதல் நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சோகம்….

நீண்ட காலமாக துபாயில் வசித்து வந்த இந்திய வெளிநாட்டவர் கடந்த வாரம் முதன்முறையாக தனது குடும்பத்தினரை அமீரகத்திற்கு அழைத்து வந்த போது, அந்த நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை கடும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

அந்த நபர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் வசித்து வந்தாலும், அவரது குடும்பத்தை அழைத்து வருவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றும், மேலும் அவர் தனது குடும்பத்தினரை துபாய்க்கு அழைத்து வருவதில் உற்சாகமாக இருந்ததாகவும் சமூக சேவகர் அஷ்ரப் தாமரசேரி (Ashraf Thamarassery) தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்பத்தை துபாய்க்கு அழைத்து வருவதற்காக அவர் சிறிது காலம் பணத்தை சேமித்து வைத்ததாகவும், அவர்களுக்காக நிறைய நிகழ்ச்சிகளை திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்த அவரது  நண்பர்கள், இறுதியில் அவரது திட்டங்கள் நிறைவேறவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் “குடும்பத்தை அழைத்து வந்த மூன்றே நாட்களில் குடும்பம் துபாயை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. தேவையான ஆவணங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் முடிந்ததும் அவரின் உடல் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு கடந்த வாரம் நடைபெற்றது” என்றும் அஷ்ரப் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விவரித்த அஷ்ரப், துபாய்க்கு வந்த குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு, பின் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்த போது, அந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “தங்கள் தந்தையுடன் மகிழ்ச்சியான விடுமுறையைக் கழிக்க எதிர்பார்த்து இங்கு வந்த குடும்பத்தினரின் உலகம் விரைவிலேயே சரிந்தது என்பதைப் பார்ப்பது வருத்தமாக இருந்தது” என்று அஷ்ரஃப் மேலும் கூறியுள்ளார்.

இறுதியாக, தேவையான ஆவணங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் முடிந்ததும் இறந்தவரின் உடல் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரணிக்கும் வெளிநாட்டவர்களின் ஆரம்ப இறப்பு அறிக்கையை பதிவு செய்ய குடும்பமானது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் உடல் பிணவறைக்கு மாற்றப்பட்டதும், அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் அறிவிப்பை வழங்குவார்கள்.

முக்கியமாக இந்த ஆவணம் காவல்துறையால் முத்திரையிடப்பட வேண்டும், அதன் பிறகு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கப்படுகிறது. உடலை வீட்டிற்குத் திருப்பி அனுப்ப குடும்பத்திற்குத் தேவைப்பட்டால், அதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!