அமீரக செய்திகள்

UAE: நோன்பு காலங்களில் உணவகங்கள் உணவுகளை காட்சிப்படுத்த அனுமதி பெறுவது கட்டாயம்..!! ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவிப்பு…!!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் புனித ரமலான் மாதம் அடுத்த மார்ச் மாதம் 11 அல்லது 12 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கடைகளும் உணவகங்களும் இஃப்தாருக்கான உணவுகளை விற்கவும் காட்சிப்படுத்தவும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ரமலான் முழுவதும் பகல் நேரத்தில் உணவு தயாரித்து விற்கத் திட்டமிடும் கடைகள் மற்றும் உணவகங்கள் ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஆணையம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஷார்ஜாவில் இஃப்தார் நேரத்திற்கு முன் கடைகளுக்கு வெளியே உணவைக் காட்சிப்படுத்துவதற்கு கடைக்காரர்கள் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் பகலில் தயாரிப்பு நோக்கங்களுக்காக உணவைக் காட்சிப்படுத்துவதற்காக மற்றும் இஃப்தாருக்கு சற்று முன் உணவகங்களின் முன் சிற்றுண்டிக் காட்சிகளுக்காக என இரண்டு வகையான அனுமதிகள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களுக்குள் அமைந்துள்ள உணவு விற்பனை நிலையங்களுக்கும், சாக்லெட் மற்றும் பேஸ்ட்ரி (pastry) கடைகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு விற்பனை நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

பகல் நேரத்தில் உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை அனுமதி:

 • அனுமதி கட்டணம்: 3,000 திர்ஹம்ஸ்
 • உணவு வெளியில் விநியோகிக்கப்பட வேண்டும்
 • உணவருந்தும் பகுதியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட கூடாது.
 • சமையல் அறைக்குள் மட்டுமே உணவு தயாரித்தல் மற்றும் சமைத்தல் அனுமதிக்கப்படுகிறது.

இஃப்தாருக்கு முன் கடைகளுக்கு வெளியே விற்பனைக்கு வேண்டி உணவை காட்சிப்படுத்துவதற்கான அனுமதி:

 • அனுமதி கட்டணம்: 500 திர்ஹம்ஸ்
 • கடைக்கு முன் பகுதியில் உணவு காட்சிப்படுத்தலாம் (மணல் இல்லை என்றால்).
 • உணவு துருப்பிடிக்காத உலோகக் கொள்கலன்களில் வைக்கப்பட வேண்டும் மற்றும் கண்ணாடி பெட்டியில் (100 செ.மீ.க்கு குறையாத அளவில்) காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
 • உணவு அலுமினியம் ஃபாய்ல் (aluminum foil) அல்லது வெளிப்படையான உணவு தர பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
 • உணவு பொருத்தமான வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும் (குளிரூட்டப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இல்லாமல்).
 • காட்சிக்கு வைக்கப்படும் உணவு அதன் அனுமதிக்கப்பட்ட செயல்பாட்டின் படி நிறுவனத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

உணவகங்கள் அனுமதி பெறக்கூடிய சேவை மையங்கள்:

 1. அல் நசிரியா மையம் (Al Nasiriyah center) (முனிசிபாலிட்டி ட்ராயிங் ஸ்டுடியோ)
 2. தசரீஹ் மையம் (Tasareeh centre)
 3. அல் ரகம் வாஹித் மையம் (Al Raqam Wahid centre)
 4. முனிசிபாலிட்டி 24 மையம் (Municipality 24 centre)
 5. அல் கலிதியா மையம் (Al Khalidiya centre)
 6. அல் சூரா வ அல் திகா மையம் (Al Suraa Wa Al Diqah centre)
 7. தவ்ஜீஹ் மையம் (Tawjeeh centre)
 8. அல் மலோமத் மையம் (Al Malomat Centre)- கிளை 3
 9. அல் சாதா மையம் (Al Saada centre)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!