அமீரக செய்திகள்

துபாய்: ஜனவரி 3 முதல் மெட்ரோ, டிராம் போக்குவரத்து நேரத்தில் மாற்றம்..!! புதிய நேரத்தை வெளியிட்ட RTA..!!

ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்திருந்த புதிய வார வேலை நாட்கள் வரும் 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கவிருப்பதால், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் முழுவதும் உள்ள அதன் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவை வழங்க கூடிய மையங்கள் செயல்படும் புதிய வேலை நேரத்தை அறிவித்துள்ளது.

அமீரக அரசு அறிவித்துள்ள இந்த புதிய வேலை நேரங்கள் அடுத்த வாரம் முதல் அதாவது ஜனவரி 3, 2022 திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் ஜனவரி 3 முதல் RTA வின் சோதனை மையங்கள், துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் ஆகியவை செயல்படும் புதிய நேரத்தை RTA வெளியிட்டுள்ளது.

சோதனை மையங்கள் (Vehicle Testing Centres)

>> RTA வின் சேவை மையங்கள் (தொழில்நுட்ப சோதனை) ஞாயிறு முதல் வியாழன் வரை ஒரு முழு வேலை வாரத்தைக் கடைப்பிடிக்கும்.

>> வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

>> சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும்.

துபாய் மெட்ரோ (Dubai Metro)

>> ரெட் மற்றும் கிரீன் வழித்தடங்களில் இயங்கும் துபாய் மெட்ரோ சேவையானது திங்கள் முதல் வியாழன் வரை காலை 5 மணி முதல் அதிகாலை 1.15 மணி வரை செயல்படும்.

>> வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.15 மணி வரை இயங்கும்.

>> ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.15 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் இருக்கும்.

துபாய் டிராம் (Dubai Tram)

>> துபாய் டிராம் சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை நேரம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இருக்கும்.

>> ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சேவையில் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!