ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு, முதல் நிதியாண்டைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு வணிக லாபத்தின் மீதான கார்ப்பரேட் வரியை அறிமுகப்படுத்துவதாக அமீரகத்தின் நிதி அமைச்சகம் நேற்று ஜனவரி 31, திங்களன்று அறிவித்தது. அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய கார்ப்பரேட் வரி குறித்து ஃபெடரல் டேக்ஸ் அதிகாரிகள் அறிவித்த சில முக்கியமான விஷயங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
புதிய கார்ப்பரேட் வரி யாருக்கு பொருந்தும்?
தேசிய அளவிலான கார்ப்பரேட் வரிவிதிப்புக்கு உட்பட்ட இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பதைத் தவிர, அனைத்து வணிகங்களுக்கும் வணிக நடவடிக்கைகளுக்கும் இந்த கார்ப்பரேட் வரியானது ஒரே மாதிரியாக பொருந்தும்
இந்த வரியிலிருந்து ஏதேனும் விதிவிலக்குகள் உள்ளதா?
அமீரகத்தில் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்கும் முயற்சியாக 375,000 திர்ஹம் வரையிலான லாபத்திற்கு 0% வரி விகிதம் பொருந்தும்.
புதிய வரி தற்போதைய ஃபிரீ ஸோன் சலுகைகளை பாதிக்குமா?
அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளுக்கும் இணங்கும் மற்றும் ஃபிரீ ஸோனிற்கு வெளியே அமீரக நிலப்பகுதியில் வணிகத்தை நடத்தாத வணிகங்களுக்கு தற்போது வழங்கப்படும் பெருநிறுவன வரிச் சலுகைகள் தொடரும்.
புதிய கார்ப்பரேட் வரி விகிதம் எவ்வளவு?
கார்ப்பரேட் வரியானது 9 சதவிகிதம் என்ற நிலையான சட்டப்பூர்வ வரி விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பற்றி என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாட்டை உலகளாவிய நிதி மையம் மற்றும் சர்வதேச வணிக மையமாக மாற்றுவதை கருத்தில் கொண்டு, உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பணவர்தனைகளுக்கு நிறுத்தி வைக்கும் வரிகளை (domestic and cross border payments) அமீரகம் விதிக்காது. அதே போன்று அமீரகத்திற்குள் வணிகத்தைத் தொடராத வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கார்ப்பரேட் வரிக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்
தனிநபர் வருமானத்திற்கு வரி பொருந்துமா?
அமீரகத்தின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான WAM தகவலின் படி, வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகள், அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உரிமம் பெற்ற அல்லது மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட வணிகம் அல்லது வணிக நடவடிக்கைகளில் இருந்து இல்லாமல் தனிநபர்கள் சம்பாதித்த பிற வருமானத்தின் மீது கார்ப்பரேட் வரி விதிக்கப்படாது.
பின்பற்ற வேண்டிய மற்ற வழிகாட்டுதல்கள் என்ன?
வணிகங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு கார்ப்பரேட் வரி அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும், மேலும் முன்கூட்டிய வரி செலுத்துதல் அல்லது தற்காலிக வரி அறிக்கைகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. OECD பரிமாற்ற விலை வழிகாட்டுதல்களுடன் படி, வணிகங்களுக்கு பரிமாற்ற விலை மற்றும் ஆவணங்களின் தேவை பொருந்தும்.