அமீரக செய்திகள்

3 மில்லியன் திர்ஹம் பரிசுகளுடன் துவங்கிய ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல் 2021..!!

ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவலின் 31 வது பதிப்பு ஷார்ஜாவின் அனைத்து பிராந்தியங்களிலும் நகரங்களிலும் தொடங்கியுள்ளது.

தற்போது துவங்கியிருக்கும் ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல் 2021, பொருட்கள் வாங்குபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அற்புதமான தள்ளுபடிகள், சொகுசு கார் ரேஃபிள்ஸ் மற்றும் 50,000 திர்ஹம் மதிப்புள்ள வாராந்திர வவுச்சர்கள் உள்ளிட்ட 3 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பல பரிசுகளை வழங்கவிருக்கின்றது.

இந்த ஃபெஸ்டிவலானது, ஈத் அல் பித்ரின் மூன்றாம் நாள் வரை இயங்கும் என்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் புதுமையான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில், சஹாரா சென்டர் (Sahara Center) 200,000 திர்ஹம் மதிப்புள்ள வவுச்சர்களையும், BMW X6 இல் ஒரு மெகா டிராவையும் வழங்கும் என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக சிட்டி சென்டர் ஷார்ஜாவில் (city center sharjah) 21 கேரட் தங்கத்தின் அரை கிலோ டிராவையும், மேலும் பல வெற்றி வாய்ப்புகளையும் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஷாப்பிங் சென்டர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறப்பு கடைகளின் ஒத்துழைப்புடன் ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (Sharjah Chamber of Commerce and Industry, SCCI) இதனை ஏற்பாடு செய்துள்ளது.

“கடந்த மூன்று தசாப்தங்களாக, ஷார்ஜா ரமலான் ஃபெஸ்டிவல் ஷார்ஜா முழுவதும் மிகவும் விரும்பப்படும் ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது மட்டுமல்லாமல், சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வுகளை அனுபவிப்பதற்கும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மறக்கமுடியாத நேரங்களை செலவிடுவதற்கான சரியான இடமாகவும் மாறியுள்ளது” என்று SCCI-ன் தலைவர் அப்துல்லா சுல்தான் அல் ஓவைஸ் கூறியுள்ளார்.

SCCI இயக்குநர் ஜெனரல் முகமது அகமது அமீன் அல்-அவாடி கூறுகையில், “ஷார்ஜாவில் பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும், அதன் வணிக சமூகத்திற்கு ஆதரவளிக்கவும், பல்வேறு துறைகளில் அதன் செழிப்பை அடையவும் SCCI தனது நோக்கம், பார்வை மற்றும் முக்கிய இலக்குகளை அடைய எந்த முயற்சியையும் விடவில்லை. இந்த கண்ணோட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார மற்றும் வணிக இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் வணிகர்கள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் வணிகங்களை வளர்க்கவும் வளரவும் வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் மற்ற நிகழ்வுகளுடன் இந்த நிகழ்வை ஒழுங்கமைக்க நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

SCCI-ன் பொருளாதார உறவுகள் மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் இப்ராஹிம் ரஷீத் அல் ஜர்வான் கூறுகையில், கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் மற்றும் பங்கேற்கக் கூடிய மால்கள் மற்றும் கடைகள் வழங்கும் பெரிய தள்ளுபடிகள், அவை பல்லாயிரக்கணக்கான திர்ஹம்களின் விற்பனையை அடைய உதவும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!