அமீரக செய்திகள்

UAE: விரைவில் துவங்கவிருக்கும் ரமலான் 2024.. வேலை, கட்டண பார்க்கிங் நேரங்களில் வரும் மாற்றம்..

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மாதத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாத துவக்கமானது பிறை பார்க்கும் குழுவால் பிறை நிலவைப் பார்த்த பின்னரே அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும். பெரும்பாலும் மார்ச் 11, 2024 அன்று பிறை தென்படும் என்று வானியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புனித ரமலான் மாதத்தின் போது கடைபிடிக்கப்படும் நோன்பு மற்றும் தொழுகைகள் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பொதுவாக, ரமலான் மாதத்தில் நாட்டில் குடியிருப்பாளர்களின் வேலை நேரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்படும். குறிப்பாக, அலுவலகங்கள், மால்கள், உணவகங்கள் மற்றும் கட்டண பார்க்கிங்கின் வேலை நேரத்தில் மாற்றம் எப்படி இருக்கும் என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்.

1. தனியார் துறை அலுவலகங்கள்

2022 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 33ஐ அமல்படுத்துவது குறித்த 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண் 1 இன் பிரிவு 15 (2) இன் படி, ரமலான் மாதத்தில் நிறுவனங்களின் வேலை நேரம் இரண்டு மணிநேரம் குறைக்கப்படுகிறது. அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான – u.ae இன் படி, முஸ்லீம் அல்லாத தொழிலாளர்களும் ரமலான் மாதத்தின் போது  ஊதியக் குறைப்பு இல்லாமல் குறைக்கப்பட்ட வேலை நேரத்தைப் பெற உரிமை உண்டு.

2. உணவகங்கள் திறக்கும் நேரம்

நாட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் நோன்பு நேரத்தை கடைபிடிக்கின்றன. அவை பகலில் மூடப்பட்டு மாலை தொழுகைக்குப் பிறகு திறக்கப்படுகின்றன. சில உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் பகலில் திறந்திருக்கும், மேலும் மக்கள் டெலிவரிக்காக உணவை ஆர்டர் செய்யலாம் அல்லது எடுத்துச் செல்லலாம் என்று அமீரக அரசாங்கம் அறிவித்துள்ளது.

3. மளிகை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்படும் நேரம்

புனித ரமலான் மாதத்திலும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகை கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். மால்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.

4. பார்க்கிங் நேரம்

ரமலான் மாதத்தினை முன்னிட்டு கட்டண பொது பார்க்கிங் நேரங்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் நேரம், கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகள் பற்றிய தகவல்கள் பார்க்கிங் பகுதிகளால் பார்க்கிங் மீட்டர்களில் குறிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) படி, ரமலானின் போது துபாயில், கட்டண பார்க்கிங் நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆகும். இதே போல், அனைத்து எமிரேட்டுகளுக்கான விவரங்கள் ரமலான் மாத நெருக்கத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

5. டாக்ஸிகள் கிடைக்கும் நேரம்:

u.ae இன் கூற்றுப்படி, அமீரகத்தில் டாக்சிகள் 24/7 கிடைக்கும் என்றாலும், மாலை நேரங்களில், நிறைய ஓட்டுநர்கள் தங்கள் நோன்பினை முடித்துக் கொள்வதால், சாலையில் இருந்து நேரடியாக டாக்ஸியை எடுப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இந்த சமயங்களில், நீங்கள் Careem, Hala Taxi அல்லது Uber போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் முன்கூட்டியே ஒரு டாக்ஸியை முன்பதிவு செய்வது நல்லது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!