அமீரக செய்திகள்

டிசம்பர் 17 முதல் கோலாகலமாக தொடங்கவிருக்கும் “துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2020”..!! 1 மில்லியன் பரிசுத்தொகை வெல்லவும் வாய்ப்பு..!!

துபாயில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வரும் துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் (Dubai Shopping Festival – DSF) 26 வது பதிப்பானது வரும் டிசம்பர் 17 முதல் அடுத்த வருடம் ஜனவரி 30 வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் போது வாடிக்கையாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் வெல்ல வாய்ப்பிருப்பதாக துபாய் ஷாப்பிங் மால்கள் குழுவானது இன்று தெரிவித்துள்ளது.

துபாய் ஷாப்பிங் மால் நடைபெறவிருக்கும் மால்களில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 26, மற்றும் ஜனவரி 11, 18, 25 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் வாராந்திர ரேஃபிள் டிராவின் போது ரொக்கப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுவினரின் (Dubai Shopping Malls Group – DSMG) புரமோஷனில் அல் புஸ்தான் சென்டர் (Al Bustan Centre), அல் குரைர் சென்டர் (Al Ghurair Centre), அல் கூஸ் மால் (Al Quoz Mall), அரேபியன் சென்டர் (Arabian Centre), பின் சௌகத் சென்டர் (Bin Sougat Centre), புர்ஜுமான் சென்டர் (Burjuman Centre), சென்ட்ரல் மால் (Central Mall), துபாய் அவுட்லெட் மால் (Dubai Outlet Mall), ஜெபல் அலி மால் (Jebel Ali Mall), கராமா சென்டர் (Karama Centre), மர்ஹபா மால் (Marhaba Mall), ஒயாசிஸ் மால் (Oasis Mall) மற்றும் ரீஃப் மால் (Reef Mall) ஆகியவை துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலில் பங்கேற்கும் மால்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மால்களில் 150 திர்ஹம் மதிப்பிலான பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிவப்பு வவுச்சரும் (Red vouchers), 200 திர்ஹம் வரை பொருட்கள் வாங்குபவர்களுக்கு நீல நிற வவுச்சரும் (Blue vouchers) மற்றும் 300 திர்ஹம் வரை பொருட்கள் வாங்குபவர்களுக்கு மஞ்சள் நிற வவுச்சர்களும் (Yellow vouchers) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிவப்பு வுச்சர்களைக் கொண்டவர்கள் மொத்தம் 250,000 திர்ஹம்களை பரிசு தொகையாக வெல்ல முடியும் என்றும், அதே நேரத்தில் நீல வவுச்சர் வைத்திருப்பவர்கள் மொத்தம் 350,000 திர்ஹம் மற்றும் மஞ்சள் வவுச்சர் வைத்திருப்பவர்கள் 400,000 திர்ஹம் வரை பரிசு தொகையாக வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் DSF மூலம் நடத்தப்படும் ஒவ்வொரு வாராந்திர ரேஃபிள் டிராவில் மொத்தம் 24 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2,000 திர்ஹம் முதல் 20,000 திர்ஹம் வரை பரிசுகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமத்தின் தலைவர் மஜித் அல் குரைர் அவர்கள் கூறுகையில், “சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அற்புதமான மூன்று வகை ரேஃபிள் ஊக்குவிப்பை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஆண்டு அதிக பங்கேற்பாளர்கள் மற்றும் அதிக வெற்றியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் DSF 2021 க்கான நெகிழ்வான பங்கேற்புக்கான ஒரு புதிய வடிவமைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம்”.

“அத்துடன் செலவினங்களைப் பொருட்படுத்தாமல், மூன்று வகை ப்ரோமோஷன்களும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு வெற்றியாளராக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கும், இது ஷாப்பிங் செய்வதற்கான உற்சாகத்தையும் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்குவதற்கான நேரத்தையும் அதிகரிக்கும். மேலும், பொதுமக்கள் உணவருந்தினாலும் அல்லது பொருட்களை ஷாப்பிங் செய்தாலும், 150 திர்ஹம் செலவழித்தவர்கள் டிராவில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

துபாய் பெஸ்டிவல் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறினார்: “DSF என்பது ஆண்டின் சில்லறை விற்பனையில் முக்கிய நிகழ்வாகும். துபாய் உலகின் ஷாப்பிங் மையமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட விளம்பரங்களும் செயலாக்கங்களும் ஷாப்பிங் செய்பவர்களிடையே பிரபலமானவை. உலகெங்கிலும் உள்ள மக்கள் துபாய் ஷாப்பிங் விழாவை எதிர்நோக்குகிறார்கள், ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு வாழ்நாள் அனுபவத்தை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த ஆண்டின் DSMG ன் புதிய வடிவம் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் என்றும், மேலும் மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!