அமீரக செய்திகள்

இணையம் மூலமாக உங்களது தொழிலை நடத்த வேண்டுமா? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்தும்..!

தகவல் தொழில்நுட்பம் உலகின் இயக்கத்தை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது. விரல் சொடுக்கில் உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்களால் எதையும் செய்யமுடியும். பொருட்கள் வாங்குவதையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன். வீட்டிலிருந்து கிளம்பி, கடைத்தெருவிற்குச் சென்று, முட்டி தேய அலைந்து என்ன வாங்கவந்தோம் என்பதையே மறந்து.. ஒருவழியாக பொருளை வாங்கி.. வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஆனால் இப்பொழுது கதையே வேறு. ஒரு கிளிக். வீட்டு வாசலில் பொருளை வந்து கொடுக்க ஆட்கள் காத்திருக்கிறார்கள். இதை சாத்தியமாக்கியிருக்கிறது இணையம்.

ஷாப்பிங் மற்றுமல்ல அனைத்து தொழில்களும் இணையம் மூலமாக கணிசமான லாபத்தை ஈட்டி வருகின்றன. தங்களது நல்வரவை விரும்பும்… என்பதெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு இணைய முகவரி அனைத்தையும் நிகழ்த்திக்காட்டும் வல்லமை படைத்தது.

அப்படி உங்களுடைய தொழில் எதுவாக இருந்தாலும் அடுத்தகட்டத்திற்கு அதனை எடுத்துச்செல்ல, எதிர்கால சந்ததியுடன் போட்டிபோட விரும்பும் நபர்கள் அனைவரும் தங்களது தொழிலுக்கென்று ஓர் இணையதளம் வைத்திருத்தல் அவசியம். இதனை மறுப்பவர்கள் யாருமிருக்க முடியாது. சரி, எப்படித் தொடங்குவது? யாரை அணுகுவது?

உங்களைப் போன்றவர்களுக்காகவே இருக்கிறது ரெப்டஸ் நிறுவனம். தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் 5 வருடத்திற்கும் மேலாக இயங்கிவரும் இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். குறைந்த கட்டணம், அழகான வெப் டிசைன் என ரெப்டஸ் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகள் அலாதியானவை. சரி, இந்த நிறுவனம் வழங்கும் பேக்கேஜ்கள் குறித்துப் பார்க்கலாம்.

உங்களுடைய இணையதளத்தின் முதல் 6 பக்கங்களை ரெப்டஸ் நிறுவனமே வடிவமைத்துத் தரும்.

உங்களுடைய தொழிலின் அடிப்படையில் உங்களுக்கான இணையதளத்தின் டொமைன் நேம் உங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

உங்களுடைய இணையதளத்திற்கு கிளவுட் வகையிலான ஹோஸ்டிங்கை வழங்குகிறது ரெப்டஸ்.

ரெப்டஸ் உங்களுக்கு 200 பிசினஸ் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கித்தரும். ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரியும் 10 ஜிபி தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டவை.

குறைந்த கட்டணம்

மற்ற இணையதளங்களைப் போல குறைவான கட்டணத்தை முதலில் பெற்றுக்கொண்டு பின்னர் ஹோஸ்டிங்கிற்குத் தனியாக, மின்னஞ்சல்களை உருவாக்குவதற்குத் தனியாகவென்று ரெப்டஸ் மறைமுக கட்டணம் வசூலிக்காது என்பதே இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்நிறுவனத்தைத் தேடிவர முக்கியமாக காரணம்.

நீங்கள் ஆண்டுக்கு 499 திர்ஹம்ஸ் செலுத்தினால் மட்டும் போதும். மேற்கண்ட சேவைகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படும். அதற்கு கூடுதலாக ஒரு திர்ஹம்ஸ் கூட உங்களிடம் வசூலிக்கப்படமாட்டாது. காத்திருந்ததெல்லாம் போதும். உங்களுடைய தொழிலை வளர்த்தெடுக்க வேண்டிய களத்தை ரெப்டஸ் உங்களுக்குக் கை காட்டுவதோடு, உங்களுடைய வளர்ச்சியில் உடன் நிற்கும். இப்போதே உங்களுடைய தொழிலுக்கான இணையதளத்தை உருவாக்கிடுங்கள்.

ரெப்டஸ் நிறுவனம் வெப் டிசைன் மட்டுமல்லாது சோசியல் மீடியா மார்க்கெட்டிங், கூகிள் மார்க்கெட்டிங், ஈமெயில் மார்க்கெட்டிங், SMS மார்க்கெட்டிங், SEO போன்ற அனைத்து சேவைகளையும் சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!