அமீரக செய்திகள்

அபுதாபியில் உள்ள Qasr Al Watan பார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பு.!!

அபுதாபியில் உள்ள கஸர் அல் வத்தன் (Qasr Al Watan) சுற்றுலாத்தலமானது வரும் அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை முதல் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவிக்கையில் பாதுகாப்பான கலாச்சார அனுபவத்தை வழங்குவதற்காக விரிவான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு மீண்டும் கஸர் அல் வதன் திறக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் Qasralwatan.ae என்ற வலைத்தளத்தில் சென்று முன்பதிவு செய்வது அவசியம் என்றும், அனைத்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களும் முக கவசம் அணிவது, 2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் தவறாமல் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெர்மல் ஸ்கிரீனிங் மூலம் அங்கு வரும் பாவையாளர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸர் அல் வத்தன் அரண்மையின் மோஷன் சவுண்ட் (motion sound) மற்றும் லைட் ஷோ (light show) வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலைகளில் நடைபெறும் என்றும், எனினும் அங்கு அமைந்திருக்கும் நூலகம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!