அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிங்க் நிறத்திலான ஏரி..!! சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் புகைப்படம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா கடற்கரைக்கு அருகே இளஞ்சிவப்பு நிறத்திலான ஒரு ஏரி (Pink Lake) கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அந்த ஏரியின் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அமீரகத்தில் 19 வயதான பல்கலைக்கழகத்தில் படிக்கும் எமிராட்டி மாணவர் அம்மர் அல் ஃபார்ஸி என்பவர் இந்த ஏரியினை கண்டுபிடித்து அதன் வியத்தகு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஸ் அல் கைமாவின் அல் ராம்ஸ் பகுதியில் அமைந்துள்ள சரயா தீவுகளில் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ட்ரோன் மூலம் இந்த ஏரியின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அல் ஃபார்ஸி கூறியுள்ள இந்த ஏரி சுமார் 10 மீ அகலமும் 40 மீ நீளமும் கொண்டது என்று கூறப்படுகிறது.

howstuffworks.com என்ற வலைத்தளத்தால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஹாலோபாக்டீரியா மற்றும் ஆல்கா டுனாலியேல்லா சலினா ஆகியவை ஏரிகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற காரணமாகின்றன என்றும், ஏனெனில் அவை இரண்டும் உப்புச் சூழலில் செழித்து வளர்கின்றன என்றும் விளக்கப்பட்டுள்ளது. கரோடினாய்டு சிவப்பு நிறமிகளுக்கு ஹாலோபாக்டீரியா மற்றும் ஏரியின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு டுனாலியேல்லா சலினா ஆகியவை காரணம் என்று கூறப்படுகின்றது.

இது குறித்து ராஸ் அல்கைமாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சைஃப் அல் கெய்ஸ் அவர்கள் கூறியதாவது, “நீர் நிறமாற்றம் மற்றும் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் சிவப்பு ஆல்காக்களின் பெருக்கம் காரணமாகும். அதில் 4,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

எனினும், அந்த ஏரியில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்படும் வரை ஏரியின் நிறத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிக்க முடியாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிறத்திலான ஏரி பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அமீரகத்தில் வசிக்கும் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் இந்த ஏரியின் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!