அமீரக செய்திகள்

துபாய்: ரமலானையொட்டி பொது பேருந்து சேவை நேரங்களில் மாற்றம்..!!

ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாய் மெட்ரோ, டிராம் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் பொது பேருந்து செயல்படும் நேரங்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள பேருந்து சேவை மாற்றங்கள் குறித்த முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொது பேருந்து சேவைகள் இயங்கும் நேரம்

– கோல்ட் சூக் அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 1.22 மணி வரை

– அல் குபைபா அதிகாலை 4.26 முதல் நள்ளிரவு 12.57 வரை 

– சத்வா அதிகாலை 4.40 மணி முதல் இரவு 11.50 மணி வரை. ரூட் C01 மட்டும் முழுநேரமும் செயல்படும்

– அல் குசைஸ் அதிகாலை 4.50 முதல் நள்ளிரவு 12.27 வரை

– அல் கூஸ் தொழில்துறை பகுதி அதிகாலை 5.02 முதல் இரவு 11.59 வரை

– ஜபெல் அலி அதிகாலை 4.58 முதல் இரவு 11.34 வரை

நகரங்களுக்கு இடையேயான பேருந்து, மற்றும் துணை பேருந்து நிலையங்களுக்கான நேரங்கள்

– அல் குபைபா காலை 6.40 முதல் இரவு 10.20 வரை

– அல் இத்திஹாட் ஸ்கொயர் அதிகாலை 4.25 முதல் நள்ளிரவு 12.15 வரை

– தேரா சிட்டி சென்டர் காலை 6.40 முதல் இரவு 11.30 வரை

– அல் சப்கா காலை 6.30 முதல் இரவு 10.30 வரை

– எடிசலாட் மெட்ரோ நிலையம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

– அபு ஹைல் மெட்ரோ நிலையம் காலை 6.30 முதல் இரவு 10.35 வரை

வெளி நிலைய பேருந்து சேவை நேரங்கள்:

– ஜுபைல் ஸ்டேஷன், ஷார்ஜா காலை 5.30 முதல் இரவு 11.15 வரை

– அஜ்மான் காலை 5.30 முதல் இரவு 11:00 வரை.

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்

ரமலான் மாதத்தில், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் வரையிலும் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

உம் ரமூல், அல் மனாரா, தேரா, அல் பர்ஷா, தவார், அல் கஃபாஃப் மற்றும் RTA இன் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் 24 மணி நேரமும் வழக்கம் போல் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!