அமீரக செய்திகள்

அமீரக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உணவுப் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு..!

அமீரகத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் வரும் வாரங்களில் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டதால், உலகளாவிய பொருட்களின் விலைகளில் சரிவு மற்றும் சில பொருட்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டது என இந்த காரணங்களால் விலைகள் குறைந்துள்ளதாக உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

உக்ரைனில் இருந்து கோதுமை, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான தடையை தளர்த்தியுள்ளது. இது உள்ளூர் சில்லறை விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது நாட்டில் பணவீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள நுகர்வோருக்கு நேரடியான பலன்கள் கிடைக்கும்.

சமையல் எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை இரண்டு மிக முக்கியமான பொருட்களாகும். அவை 30 சதவீதம் வரை வீழ்ச்சியைக் காணும். ஏனெனில் இரண்டிலும் அதிக இருப்புக்கள் உள்ளன. பிப்ரவரியில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் துவங்கியதில் இருந்து, உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டும் உணவுப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர்களாகும். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறைவது ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் அடிப்படை பொருட்களின் விலைகளும் குறையும்.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. FAO-வின் தரவு பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, தானியங்கள், கோர்ஸ் தானியங்கள், மக்காச்சோளம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகளின் தரவுகளைக் காட்டியுள்ளது.

அதன் உணவு விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் 8.6 புள்ளிகள் சரிந்து 140.9 ஆக இருந்ததாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் காய்கறி விலைக் குறியீடு 19.2 சதவீதம் குறைந்துள்ளது. தானியங்களின் விலைக் குறியீடு கடந்த மாதம் 11.5 சதவீதம் சரிவைக் கண்டது. உலக கோதுமை விலை 14.5 சதவீதம் குறைந்தது. சோளத்தின் விலை 10.7 சதவீதம் சரிவைக் கண்டது. சர்க்கரை விலை ஏறக்குறைய நான்கு சதவீதம் சரிந்தது.

உக்ரைனில் இருந்து கோதுமை மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி விலையில் அழுத்தத்தை குறைக்கும் என்றும் இது மக்களுக்கு பயனளிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். கூடுதலாக, ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலை குறைப்பு போக்குவரத்து நிறுவனங்களின் சுமையை குறைக்கும். இந்தியா தற்போது ஏற்றுமதியை அனுமதித்துள்ளதால் சர்க்கரை விலை குறையும் என்று கூறப்படுகிறது. “சர்க்கரை விலை 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும். ஏனெனில் இந்தியா இதற்கு முன்பு சர்க்கரையை தடை செய்தபோது, விலை 20 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன.

மேலும், அமீரகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையை லிட்டருக்கு 60 ஃபில்ஸ் குறைத்துள்ளது. இது போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைக்கான செலவுகளைக் குறைக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!