மலேசியப்பிரதமர் திடீர் ராஜினாமா – அதிர்ச்சியில் மலேசிய மக்கள்

மலேசியப்பிரதமர் மகாதீர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று மலேசிய அரசரை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மீண்டும் பிரதமர் தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராக இருப்பதற்கு மலேசிய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்பொழுது தனது பிரதமர் பணியைத் தொடர்ந்துள்ளார்.
உலகின் மூத்த அரசியல் தலைவரான 94 வயதான மகாதீர், 1981 ல் பிரதமராகப் பதவியேற்றார். நீண்ட காலமாக பிரதமர் பதவியில் இருந்த அவர் 2003 ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின் 2018 ல் மீண்டும் பிரதமரான மகாதீர் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார்.
தற்பொழுது மலேசியாவில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து பகதான் ஹரப்பான் என்ற கூட்டணி கட்சியை உருவாக்கி 2018 ல் ஆட்சி அமைத்தனர். தற்பொழுது கூட்டணிக்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட முறிவே மலேசியப்பிரதமர் ராஜினாமா செய்யவதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் தனது கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகி இருப்பதாக கூறப்படுகின்றது.
மலேசியபிரதமர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மலேசிய பங்கு சந்தை 2.69% வீழ்ச்சி கண்டுள்ளது.