கத்தார் : ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!! கத்தார் செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவல்…!!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் இன்று ஒரு நாளில் மட்டும் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கத்தார் நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 24 பேருக்கு இருந்த வைரஸ் தொற்று ஒரே நாளில் 262 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 238 பேரும் கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் ஆவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த இருப்பிட வளாகத்தில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 238 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக கத்தார் செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது.
The Ministry of Public Health (MOPH) announced 238 new confirmed cases of Coronavirus 2019 (COVID-19) in the State of Qatar for expatriates who had contact with the three cases that were declared infected last Sunday and who reside in one residential complex #QNA pic.twitter.com/zeUc1KwQo5
— Qatar News Agency (@QNAEnglish) March 11, 2020
இந்நிலையில், உலக சுகாதார ஆணையம் (WHO) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலை “உலக பரவல் (Pandemic) ” என்று வகைப்படுத்தியுள்ளது. பாண்டமிக் (Pandemic) என்பது பெருமளவில் கட்டுப்படுத்த இயலாத, பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை குறிக்கும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது.