ஏப்ரல் 30 வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கான விமான முன்பதிவு நிறுத்தம்.. ஏர் இந்தியா அறிவிப்பு..!!!
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களுக்கும் உண்டான விமான முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது ஏப்ரல் 14ம் தேதி முடியவுள்ளது. எனவே, ஏப்ரல் 14 க்குப் பிறகு விமான சேவை தொடங்குவது குறித்தான ஒரு முடிவுக்காக காத்திருப்பதாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது பற்றி கூறுகையில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14 ம் தேதி முடிவடைவதால், ஏப்ரல் 15 முதல் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விமான சேவையைத் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
இதே போல் இண்டிகோ (Indigo) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (Spicejet) போன்ற பிற விமான நிறுவனங்களும் ஏப்ரல் 30 வரை தற்காலிகமாக முன்பதிவினை நிறுத்தி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.