வளைகுடா செய்திகள்

ரெசிடென்ஸ் விசாவில் வெளிநாட்டவர்கள் நாடு திரும்புவதற்கான சலுகை காலம் 12 மாதங்களாக நீட்டிப்பு.!! குவைத் உள்துறை அமைச்சகம் தகவல்..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் காரணமாக, செல்லுபடியாகும் குவைத் ரெசிடென்ஸ் விசா வைத்திருந்தும் குவைத் நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் குவைத் குடியிருப்பாளர்களுக்கு ஒரு முக்கிய சலுகையை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, விமான போக்குவரத்து தடையினால் குவைத் நாட்டிற்கு உரிய நேரத்தில் திரும்ப முடியாத வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் குடியிருப்பாளர்கள், குவைத் நாட்டிற்குள் மீண்டும் திரும்புவதற்காக வழங்கப்படும் 6 மாத சலுகை காலம், தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரெசிடென்சி விசாவிற்கான 6 மாத சலுகை காலம் என்பது, ஒருவர் குவைத் நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து 6 மாதம் வரையிலும் அவர் தன் சொந்த நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ தங்கியிருக்கலாம். அவர்கள் 6 மாதத்திற்குள் குவைத் நாட்டிற்கு திரும்பாது போனால், அவர்களின் ரெசிடென்ஸ் விசா தானாகவே காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உள்துறை அமைச்சகம் இந்த சலுகை காலத்தை 12 மாதங்களாக நீட்டித்திருப்பதன் மூலம், வெளிநாட்டவர்கள் குவைத் நாட்டிற்கு திரும்புவது சிறிது எளிதாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து வகையான விசிட் விசாக்கள், மற்றும் வேலை அனுமதி உள்ளிட்ட நுழைவு விசாக்களில் குவைத் நாட்டிற்குள் நுழைந்து தற்போதய சூழ்நிலைகளின் காரணமாக ரெசிடென்ஸ் விசா பெற முடியாதவர்கள் மற்றும் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்பிங் செய்ய முடியாதவர்கள் போன்றவர்களின் நிறைவடையாத பணிகளை செய்து முடிக்க ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி வரையிலும் சலுகை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே மாத இறுதிக்குள் காலாவதியான விசாவினை வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவச விசா நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்துறை அமைச்சகம் மார்ச் முதல் மே மாதம் வரையிலும், மூன்று மாத காலத்திற்கு காலாவதியான விசாவை கொண்டிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு இலவச விசா நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விசா புதுப்பித்தலுக்கான சலுகை காலங்களின் நீட்டிப்பு தற்போது குவைத் நாட்டில் வசிக்கக்கூடியவர்களில், மே மாத இறுதிக்குள் காலாவதியாகும் விசாவினை கொண்ட நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

விசா புதுப்பித்தலுக்கான மூன்று மாத கால நீட்டிப்பு, கணினிமயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் தானாகவே செய்யப்படும் என்றும் தற்போது நாட்டிற்குள் இருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் அனைத்து வகையான விசிட் அல்லது வேலை விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்த அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதுப்பித்தல்களுக்கு ஸ்பான்சர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் இவை தானாகவே செயலாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குவைத் நாட்டில் வசிக்கக்கூடிய 4.6 மில்லியன் மக்கள்தொகையில், 3.3 மில்லியன் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!