வளைகுடா செய்திகள்
வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு குவைத்தில் அனுமதி..!! வழிபாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு..!!
குவைத் நாட்டில் வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை மசூதிகளில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு தொழுகை நடைபெற இருக்கும் மசூதிகளில் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் சுகாதாரத் துறையானது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகை நடைபெற அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிமுறைகள்
- வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற இருக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே மசூதிகள் திறக்கப்படும்.
- அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
- 18 வயது முதல் 60 வயதிற்கு இடையிலான ஆண்களுக்கு மட்டுமே தொழுவதற்கு அனுமதி அளிக்கப்படும். அவர்கள் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படாதவர்களாக இருத்தல் அவசியம்.
- வழிபாட்டாளர்களுக்கிடையே குறைந்தது 1 .5 மீட்டர் இடைவெளி விட வேண்டும். அனைவரும் தங்களுக்கான சொந்த முசல்லாவைக் (தொழுகை விரிப்பு) கொண்டு செல்ல வேண்டும்.
- மசூதியின் இருப்பிட அளவை பொறுத்து மசூதிகளுக்குள் நுழையும் வழிபாட்டாளர்களின் எண்ணிக்கையானது தீர்மானிக்கப்படும்.
- உடல் வெப்பநிலை அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு மசூதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்
- தொழுகை முடிந்தவுடன் வழிபாட்டாளர்கள் அனைவரும் உடனடியாக மசூதியை விட்டு வெளியேற வேண்டும்.