சென்னை செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி..!! COVID-19 நெகடிவ் சர்டிபிகேட் இருந்தால் கட்டண தனிமைப்படுத்தலில் தளர்வு..!!

வெளிநாடுகளிலிருந்து COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழுடன் சென்னை விமான நிலையம் வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இனி இரண்டு நாட்கள் மட்டுமே கட்டண தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக சென்னை விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், அவர்கள் அனைவரும் விமான நிலையம் வந்தததும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு ஏழாவது நாள் இரண்டாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் (AAI) மற்றும் மாநில அரசின் அதிகாரிகள் இடையே நடந்த உயர் மட்டக் கூட்டத்தில், COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழுடன் வரும் பயணிகள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டண தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழ் இல்லாமல் விமான நிலையம் வரும் பயணிகள் வழக்கமான ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழுடன் பயணிகள் விமான நிலையம் வந்தாலும், மாநில அரசின் நெறிமுறைகள்படி, மாநில சுகாதார அதிகாரிகளால் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதில் நெகடிவ் ரிசல்ட் பெறுபவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 8 ம் தேதியிலிருந்து இந்தியா பயணம் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழுடன் பயணிக்கும் பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டண தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என இந்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும், இந்தியா பயணம் செய்ய விரும்புபவர்கள் ஏர் சுவிதா (Air Suvidha) என்ற போரட்டலில் தங்களின் பயண விபரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும், கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெற பயண நேரத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட COVID-19 நெகடிவ் ரிசல்ட் சான்றிதழை ஏர் சுவிதா (Air Suvidha) ஆன்லைன் போரட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 8 லிருந்து இந்தியா பயணம் செய்யவிருப்பவர்கள் கவனத்திற்கு.. புதிய வழிமுறைகள் வெளியிட்ட MoHFW.. 7 நாள் கட்டண தனிமைப்படுத்தலிலும் விலக்கு..