வளைகுடா செய்திகள்

குவைத் நாட்டில் வீட்டு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை…வெளிநாடுகளில் இருந்து தேவையான ஆட்களை நியமிக்க உடனடி உத்தரவு!

குவைத் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கென வரும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் சமீப காலமாக வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுத் தொழிலாளர் விவகாரங்களில் நிபுணரான Bassam Al-Shammari கூறுகையில், வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் வேகத்தை விரைவுபடுத்துமாறு மனிதவளத்திற்கான பொது ஆணையம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் தலைமையிலான அனைத்து சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே வீட்டு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான பணியாளர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளதால், அவற்றை கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் வீட்டு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தனியார் மற்றும் உள்நாட்டு துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான பணிகள் விரைவில் முடுக்கி விடப்படும் என்று துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல்-கலித் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நாடுகளுடன் தொழிலாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் பன்முகத்தன்மையை அணுகினால் மட்டுமே தட்டுப்பாட்டினை சரி செய்ய முடியும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

வீட்டுத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு புதிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையை அல்-ஷம்மாரி உறுதிப்படுத்தினார். எனவே, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது, தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு இடையில் உள்ள தகராறுகளை விரைவில் தீர்ப்பது போன்றவை வெளிநாட்டு தொழிலாளர்களை குவைத் நாட்டினை நோக்கி ஈர்க்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

மேலும் குவைத் நாட்டில் வீட்டு பணியாளர்களின் உரிமைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த சட்டங்கள் உள்ளன என்பதையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இதில் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு, சேவையின் இறுதி வெகுமதி மற்றும் வாராந்திர விடுப்பு போன்ற நன்மைகள் அடங்கும் என தெரிவித்தார்.

எனவே, வீட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டி புதிய உறுப்பினர் ஒப்பந்தங்களை உருவாக்கி வீட்டுப் பணியாளர்களின் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!