UAE: ஆகஸ்ட் 16 முதல் 31 வரை இந்தியா செல்லும் விமானங்களுக்கு நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!
வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில், தற்பொழுது அமீரகத்தில் இருந்து ஆகஸ்ட் 16 முதல் 31 வரை இந்தியா செல்லவிருக்கும் விமானங்களுக்கான டிக்கெட்டிற்கு நாளை (ஆகஸ்ட் 11) காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று துபாயில் இருக்கக்கூடிய இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 16 முதல் அமீரகத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களானது துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து இந்தியாவில் இருக்கக்கூடிய 18 நகரங்களுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா திரும்ப வேண்டி தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த விமானங்களில் பயணிக்க முடியும் என்றும், விமானங்களுக்கான டிக்கெட்டை www.airindiaexpress.in என்ற வலைதளத்தின் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா செல்ல வேண்டி விமானத்திற்கு முன்பதிவு செய்யும்பொழுது, பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, இந்தியாவிற்கு பயணம் செல்பவர்கள் 7 நாள் கட்டண தனிமைப்படுத்தலை தவிர்க்க விரும்பினால் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்றும் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.
All Indian nationals are advised to take benefit of online tickets of several flights from Dubai, Sharjah or Abu Dhabi @IndembAbuDhabi pic.twitter.com/C1GWgcMmyQ
— India in Dubai (@cgidubai) August 10, 2020