அமீரக செய்திகள்

UAE: ஒற்றுமையுடன் சுதந்திர தினத்தை இணைந்து கொண்டாடிய இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள்..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் 75 ஆண்டு சுதந்திர அடைந்ததை கொண்டாடும் வகையில் இரு நாட்டு பைக் ரைடர்களும் ஒன்று கூடியுள்ளனர். சிங் மோட்டார் சைக்கிள் கிளப் (SMC), பாகிஸ்தானி ரைடர்ஸ் குரூப் (PRG) மற்றும் இந்திய மோட்டார் சைக்கிள் ரைடர்ஸ் கிளப் (IMRC) ஆகியவற்றிலிருந்து 50 பைக் ரைடர்கள் அமீரகத்தில் வாகனங்களை ஓட்டினர்.

இரு நாடுகளின் தேசிய கீதம் மற்றும் கொடிகளுடன், ரைடர்கள் மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்வின்போது SMC இன் நிறுவனர் கூறுகையில், “இது இரு நாடுகளுக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம், நாங்கள் அண்டை வீட்டுக்காரர்கள். நாங்கள் ஒரே மண்ணில் இருந்து வந்தவர்கள். அமீரகத்தில் நாம் சகோதரர்களாக வாழ்கிறோம். உலகின் பிற பகுதிகளுக்கு இதை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். நாம் ஒருவரையொருவர் நேசித்து, கவனித்து, மதிக்கும்போதுதான் அமைதி பெற முடியும்” என்றார்.

பாகிஸ்தானில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது, அதே நேரத்தில் இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 திங்கட்கிழமையான இன்று கொண்டாடுகிறது.

இது தொடர்பாக PRG இன் தலைவர் மிர்சா கூறுகையில், இந்த திட்டம் இரு நாட்டு ரைடர்களை ஒன்றிணைக்கும் நோக்கமாகும், இந்த பயணம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளிலும் எங்களுக்கு உதவிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி” என்றார்.

IMRC இன் முன்னணி ரைடர் யூசுப் அலி கான் “இது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கிடைத்தில் சகோதரத்துவம் ஏற்படுகிறது, நிறம், இனம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ரைடர்கள் தங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டு, எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்” என்றார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!