வளைகுடா செய்திகள்

குவைத்திலும் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்பு ..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

கொரோனா வைரஸின் திரிபு வகையான EG.5 எனப்படும் வைரஸ் சில நாடுகளில் பரவி வருவதாக செய்தி வெளியான வண்ணம் உள்ளது. இதனை ஒட்டி சவுதி அரேபியா நாடும் உம்ரா புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளை கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் நோயின் வீரியம் அதிகரிக்க கூடும் என்பதால் மக்களை கவனமாக இருக்குமாறு வலியுறுத்திய வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் குவைத்தில் புதிதாக EG.5 வைரஸின் துணைக்குழுவைச் சேர்ந்த கொரோனா மாறுபாடு கொண்ட வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்துள்ளது.

குவைத்தின் செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 50 நாடுகளில் ஏற்கனவே இந்த வைரஸ்கள் பரவி இருப்பதால், எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் எனவே மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக, முக கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற தடுப்பு வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் மக்களை வலியுறுத்திய வண்ணம் உள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!