அமீரக செய்திகள்

இந்தியா, அமீரகம் இடையே கையெழுத்தான மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தம்…!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement, FTA) கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (comprehensive economic partnership agreement, CEPA) உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதற்கும், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சந்தைகளுக்கு ஒரு நுழைவாயிலை வழங்குவதற்கும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இடையே பிப்ரவரி 18 ம் தேதி நடைபெற்ற மெய்நகர் உச்சி மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளன.

CEPA புதிய வேலைகளை உருவாக்கும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மேலும் இரு நாடுகளிலும் பரந்த சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் என்று இரு நாடுகளும் கூறியுள்ளன. CEPA நடைமுறைக்கு வந்தவுடன், இரு நாடுகளுக்கும் இடையே சரக்கு மற்றும் சேவைகளின் ஓட்டம் எளிதாகும் என்றும் மேலும் பரந்த வகைகளில் தனிப்பயன் வரிகள் குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தை நோக்கி இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகமானது தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் (trade partner), அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 43.3 பில்லியன் டாலர்களாக இருந்தது.

2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா இருந்துள்ளது. இருதரப்பினருக்கு இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் 41 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியிருக்கின்றது.

அத்துடன் அமீரகம் இந்தியாவில் எட்டாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. ஏப்ரல் 2000 மற்றும் மார்ச் 2021 க்கு இடையில் அமீரகம் 11 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. அதே நேரத்தில் அமீரகத்தில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 85 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இந்த FTA ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!