அமீரக செய்திகள்

உலகளவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான சிறந்த நாடுகளின் பட்டியலில் அமீரகத்திற்கு நான்காம் இடம்..!!

உலகளவில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. வளைகுடா நாடுகளான, பஹ்ரைன் மற்றும் கத்தார் முறையே எட்டாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.

HSBC-யின் 14 வது வருடாந்திர எக்ஸ்பாட் எக்ஸ்ப்ளோரர் ஆய்வின் படி – வெளிநாடுகளில் வாழும் மற்றும் வேலை செய்யும் 20,000 க்கும் மேற்பட்ட மக்களின் உலகளாவிய கணக்கெடுப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கணக்கெடுக்கப்பட்ட பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர் (82 சதவீதம்) தங்களது வாழ்க்கை அடுத்த 12 மாதங்களுக்கும் நிலையானதாகவும் இயல்பானதாகவும் இருக்கும் என்று நம்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் உலகளாவிய தொற்றுநோய் காலத்திலும், உலகளாவிய சராசரி சதவிகிதமான 35 சதவிகிதத்தையும் விட அதிகமாக 53 சதவிகித்ததை அமீரகம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் தங்கள் வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலை (57 சதவீதம்) ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.

“ஐக்கிய அரபு அமீரகம் வாழ மற்றும் வேலை செய்வதற்கான முதல் ஐந்து சிறந்த இடங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருப்பது ஊக்கமளிக்கிறது மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் மிகப்பெரிய ஆற்றலின் தெளிவான அறிகுறியாகும். அக்டோபர் 12, 1946 அன்று நாங்கள் வணிகத்திற்கான எங்கள் முயற்சியை ஆரம்பித்தபோது திறனை இங்குள்ள முதல் மற்றும் ஒரே வங்கியாக நாங்கள் பார்த்தோம், அன்றிலிருந்து நாங்கள் முதலீடு செய்து வருகிறோம், நாட்டையும் எங்கள் வாடிக்கையாளர்களையும் வாய்ப்புகளைப் பெற ஆதரவளித்தோம் ” என்று HSBC அமீரக தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சர்வதேச தலைவரான அப்துல்ஃபாத்தா ஷரஃப் கூறியுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றம், ஆகியவை பலரை கவர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தங்கள் இல்லம் என்பதற்கிணங்க மாற்றியுள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல வெளிநாட்டவர்கள் மேற்கோள் காட்டிய முதல் மூன்று காரணங்கள்:

>> வருவாயை மேம்படுத்துதல் (56 சதவிகிதம்),

>> தொழில் முன்னேற்றம் (49 சதவிகிதம்),

>> வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் (43 சதவிகிதம்).

ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் வாழ்க்கைத் தரமே வெளிநாட்டவர்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தங்க வைக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டவர்கள் (86 சதவிகிதம்) தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் தங்கள் சொந்த நாட்டை விட சிறந்தது என்றும் ஒவ்வொரு 10 இல் ஆறு பேர் அந்த காரணத்திற்காக நீண்ட காலம் தங்க விரும்புவதாகவும் கூறுகின்றனர்.

தொற்றுநோய் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்குவதற்கான திட்டங்களை மாற்றியதாக 11 சதவிகிதத்தினர் மட்டுமே கூறுகின்றனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!