அமீரக செய்திகள்

துபாய்: மூன்று ஆண்டுகளாக குற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை..!! காவல்துறை மகிழ்ச்சி..!!

உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றான துபாயில் இருக்கும் அல் ஃபக்கா பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து அல்லது குற்றவியல் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று துபாய் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தளபதியான மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி மேற்கொண்ட அல் ஃபக்கா போலிஸ் போஸ்டுக்கான வருடாந்திர ஆய்வு பணியின் போது இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Al Faqaa போலீஸ் போஸ்ட், தனது அதிகார வரம்பு முழுவதும் பாதுகாப்பு கவரேஜில் அதன் இலக்கான 95 சதவீதத்தை தாண்டி 96.25 சதவீதத்தை அடைந்துள்ளது. அதனுடன் இது அவசரநிலைக்கான சராசரி பதிலளிக்கக்கூடிய நேரத்தை 2021 ஆம் ஆண்டில் மூன்று நிமிடங்கள் மற்றும் 23 வினாடிகளாக மாற்றியுள்ளது. இதற்கு இலக்காக ஆறு நிமிடங்கள் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அவசரநிலை அல்லாத நிகழ்வுகளின் சராசரி பதிலளிப்பு நேரம் வெறும் 12:48 நிமிடங்கள் மட்டுமே ஆகும். 2021 இல் இதற்கு இலக்கு 13 நிமிடங்களாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் அல் ஃபக்கா போலீஸ் போஸ்ட் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான குற்றங்களை பதிவு செய்யவில்லை என்பதும் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

மேஜர்-ஜெனரல் அல் மன்சூரி, சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அதிகார வரம்பில் ரோந்துப் பணியை திறம்படச் செய்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அல் ஃபக்கா காவல் துறை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டில் 26 போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் நான்கு போக்குவரத்து தொடர்பான இறப்புகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 22 போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் ஏழு தொடர்புடைய இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. Al Faqaa Police Post பல போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!