அமீரக செய்திகள்

தனியார் நிறுவனங்கள் 50 நாட்களுக்குள் அமீரக குடிக்களை பணியமர்த்த வலியுறுத்தல்..!! மீறினால் 72,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்னர் சமீபத்திய எமிரேடிசேஷன் இலக்கான அமீரக குடிமக்களை பணியமர்த்தும் நடைமுறையை விரைவில் அடையுமாறு தனியார் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ளன என்று மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) வலியுறுத்தியுள்ளது.

50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் எமிரேடிசேஷன் விகிதத்தை அதாவது அமீரக குடிமக்களை பணியமர்த்தும் விகிதத்தை 2 சதவீதம் கொண்டு வர வேண்டும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜனவரி 1, 2023 முதல், இந்த விதிமுறைக்கு இணங்கத் தவறிய நிறுவனங்களுக்கு ஒவ்வொரு எமிரேட்டிக்கும் 72,000 திர்ஹம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இலக்கை அடைய நிறுவனங்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் எமிராட்டி டேலண்ட் காம்பிடேஷன் கவுன்சிலின் (Nafis) கீழ் ஊக்கத்தொகைகள் மற்றும் ஆதரவு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகம் “உலகம் முழுவதிலும் உள்ள நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையானவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்ய ஊக்குவிக்கும் மேம்பட்ட வணிகச் சூழல் மற்றும் முதலீட்டு சூழலை அடைய உதவும் வகையில், தனியார் துறையுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதில் நாங்கள் எங்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ” ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

எமிரேடிசேஷன் இலக்கை அடையும் தனியார் துறை நிறுவனங்கள், First Category Classification-ல் மற்றும் Tawteen Partners Club-ல் மெம்பர்ஷிப் பெறலாம் என அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன் இதன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் சேவைக் கட்டணத்தில் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
error: Content is protected !!