வளைகுடா செய்திகள்

கமர்ஷியல் விசிட் விசாவை பணி அனுமதியாக மாற்றிக்கொள்ள குவைத் அனுமதி..!!

குவைத்தில் கமர்ஷியல் விசிட் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் தங்கள் விசாவை பணி அனுமதிக்கு மாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று நாட்டின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை குவைத்தில் உள்ள நிறுவனங்களில் அதிகரித்து வரும் மனிதவள தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குவைத் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த முடிவு PAM மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் கொரோனா வைரஸிற்கான அவசரக் குழு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாகும். இது வணிக விசிட் விசாக்களில் நாட்டிற்குள் நுழைபவர்கள் ஆர்டிகிள் 18 ன் கீழ் உள்ள பணி விசாக்களாக எளிதாக மாற்ற அனுமதிக்கிறது” என்று PAM இயக்குனர் ஜெனரல் அஹ்மத் அல்- மூசா தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 56,300 குறைந்து, அவர்களின் மொத்த எண்ணிக்கை 3.154 மில்லியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!