ஒரு வருடத்திற்கும் மேல் விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர அனுமதி அளித்தது அரசு..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றுலா விசா வழங்கும் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர் வரும் அக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பல்வேறு உள்ளீடுகளை பரிசீலித்த பிறகு, உள்துறை அமைச்சகம் அக்டோபர் 15, 2021 முதல் சார்ட்டர் விமானங்கள் மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு புதிய சுற்றுலா விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 15, 2021 முதல் புதிய சுற்றுலா விசாக்களில் மட்டுமே இந்தியாவிற்குள் நுழையலாம் என்றும் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவினை அடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விமான சேவையும் மீண்டும் துவங்க வாய்ப்பிருப்பதாக பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.