வளைகுடா செய்திகள்

ரெசிடென்ஸி ரத்து செய்யப்பட்ட மற்றும் இறந்த வெளிநாட்டவர்களின் பெயரில் 87,140 வாகனங்கள்.. ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த குவைத் போக்குவரத்து அமைச்சகம்!

குவைத் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 87,140 வாகனங்கள் ஓட்டுனருக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதாவது வேறொருவரின் பெயரில் உள்ள வாகனங்களை ஓட்டுநர்கள் ஓட்டுகின்றனர் எனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது வாகனமானது ஏற்கனவே குவைத் நாட்டில் உரிமம் வைத்திருந்து ரத்து செய்யப்பட்டவரின் பெயரிலோ, குவைத்தில் இல்லாத நபரின் பெயரிலோ அல்லது இறந்தவரின் பெயரிலோ பதிவு செய்யப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

எனவே இத்தகைய வாகனத்தின் உரிமையை ரத்து செய்து முறையாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அல்லது வாகனத்தின் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் எனவும் பொது போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு வாகனங்களின் முறையான ஆவணங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றால் அவை விதிமீறலாகவே கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு (207) இன் படி வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஓட்டுநர் முறையான லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினாலோ அல்லது காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டாலோ போக்குவரத்து சட்டத்தின்படி வாகனத்தை பறிமுதல் செய்து ஏலத்தில் விட அரசருக்கு உரிமை உண்டு எனவும் பொதுமக்களை எச்சரித்துள்ளது. எனவே குவைத் நாட்டில் வாகனம் வைத்திருப்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு முறையான ஆவணங்களை புதுப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!