அமீரக செய்திகள்

அபுதாபியில் வசிப்பவர்கள் கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்வது..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கும், சமூக உறுப்பினர்களை பாதுகாக்கவும் அமீரக அரசும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக அபுதாபி அரசும் தனது எமிரேட்டை சார்ந்த குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், தொற்று பரவாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கிரீன் பாசை தக்கவைத்துக்கொள்ள 14 நாட்களுக்கு ஒரு முறை PCR சோதனை, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்குள் நுழைய 7 நாள் PCR வேலிடிட்டி கட்டாயம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை குடியிருப்பாளர்களுக்கு விதித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது உங்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். அது குறித்த தகவல்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்வது..?

>> அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் கொரோனாவிற்கான சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்ற நபர்கள் கடுமையான அறிகுறிகளை கொண்டிருந்தாள் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.

>> கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றும் தீவிர அறிகுறிகள் அல்லாமல லேசான அறிகுறிகள் கொண்ட நபர்கள் அல்லது 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது நாள்பட்ட நோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் அபுதாபியில் உள்ள பின்வரும் மதிப்பீட்டு மையங்களில் ஏதேனும் ஒரு மையத்திற்கு செல்ல வேண்டும்.

  • அபுதாபி சிட்டி: சையத் துறைமுகம் (Zayed Port)
  • அல் ஐன்: அல் ஐன்கன்வென்ஷனல் மையம், அல் குபியாசி மண்டபம் (Al Ain Convention Centre, Al Khuabiaisi hall)
  • அல் தஃப்ரா பகுதி: மதீனத் சையத் சிட்டி மற்றும் அனைத்து SEHA வுடன் இணைந்த மருத்துவமனைகள் (Madinat Zayed and all SEHA affiliated hospitals)

>> சோதனை முடிவில் பாசிட்டிவ் முடிவை பெற்றும் கொரோனா தொற்றிற்கான அறிகுறியற்றவராக இருந்தால், அவர்கள் SEHA வின் ஒரு டிரைவ் த்ரூ மையத்திற்கு சென்று அவர்களின் முடிவை உறுதிப்படுத்த மீண்டும் ஒரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும். முடிவைப் பெறும் வரை அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

>> இரண்டாவது சோதனை முடிவும் பாசிட்டிவ் ஆக இருந்து அறிகுறியற்றவர்களாகவே இருந்தால், அவர்கள் வீட்டிலேயே தங்களின் தனிமைப்படுத்தலை தொடர வேண்டும் மற்றும் வீட்டின் மற்ற உறுப்பினர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 24 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை தொடர்ந்து நெகட்டிவ் முடிவை பெரும் வரை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் டிரைவ் த்ரூ சோதனை மையத்திற்கு சென்று அவர்கள் PCR சோதனையைத் தொடர வேண்டும்.

>> வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் அவர்களுக்கு கொரோனா தொற்றிற்கான தீவிர அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும்.

கொரோனாவால் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ன செய்வது..?

>> கொரோனா தொற்றுநோயால் பாதிப்புக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் மேற்கூறிய மதிப்பீடு மையங்களில் ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று உடனடியாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பின்னர் நீங்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான திட்டத்தில் பதிவு செய்யப்படுவீர்கள்.

>> தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஆறாவது நாளில் PCR சோதனை எடுக்க வேண்டும். PCR சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தால் அவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்துவிடும்.

>> தடுப்பூசி போடாத நபர்கள் பத்து நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் ஒன்பதாம் நாள் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். PCR சோதனை முடிவு நெகட்டிவ் ஆக இருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்துவிடும். வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட திட்டத்தில் பதிவுசெய்யப்பட்டவர்கள், சேஹா பிரைம் மதிப்பீட்டு மையங்களில் வாக்-இன் மூலம் இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் யார்..?

>> அமீரக அரசின் வழிகாட்டுதல்களின்படி, நெருங்கிய தொடர்பு என்பது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் ஒரு மீட்டர் அல்லது அதற்கும் குறைவான அருகில், 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொடர்பில் இருந்த நபர் நெருங்கிய தொடர்பில் இருந்தவராக கருதப்படுவார்.

>> இரண்டாவதாக, கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளைக் காட்டுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது பாசிட்டிவ் முடிவை பெற்றவரின் PCR சோதனை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பத்து நாட்களில் நேரடியாக அதாவது கைகுலுக்கல், தொடுதல் போன்ற உடல் ரீதியான தொடர்பில் இருக்கும் நபரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவராக கருதப்படுவார்.

இதே போன்று, துபாயில் வசிக்க கூடிய குடியிருப்பாளர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் வசிப்பவரா நீங்கள்.. கொரோனா சோதனையில் பாசிட்டிவ் முடிவை பெற்றால் என்ன செய்வது.. ??

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!