அமீரக செய்திகள்

இந்தியாவில் துவங்கவிருக்கும் சர்வதேச விமான போக்குவரத்து… அமீரகம்-இந்தியா இடையே அதிகரிக்கவுள்ள விமான சேவைகள்..!!

கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை இந்தியா திரும்பப் பெற்றதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இயக்கப்படும் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கவிருக்கின்றன அல்லது தங்களின் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளன என்று ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், அபுதாபி மற்றும் பல்வேறு இந்திய நகரங்களுக்கு இடையே Go First, Air India Express, Air India மற்றும் IndiGo உள்ளிட்ட விமான நிறுவனங்களின் சேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அபுதாபி, அல் அய்ன், துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ, அமிர்தசரஸ், அகமதாபாத், இந்தூர், கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, திருச்சி மற்றும் மங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச விமான சேவை துவங்கப்படுவதன் மூலம் இந்த நகரங்களுக்கு தற்போதுள்ளதை விட அதிக விமான சேவைகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் சர்வதேச பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும்  விமான சேவைகளை அனுமதிக்கும் வகையில், 37 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது. வரும் மார்ச் 27 முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கப்பட்டால் அதன்பின் இந்த ஏர் பபுள் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!