அமீரக செய்திகள்

துபாயில் புத்தாண்டு நிகழ்வையொட்டி மூடப்படும் சாலைகளின் விபரங்களை அறிவித்த RTA..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் புத்தாண்டையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், டவுன்டவுன் துபாயில் (Downtown Dubai) நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அங்கிருக்கும் சில தெருக்களை மூடுவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31 ம் தேதி, 4 மணியில் இருந்து, அவுத் ஸ்ட்ரீட் (Oud street) முதல் அல் மேதான் ஸ்ட்ரீட் (Al Meydan street) வரையிருக்கும் அல் அஸாயில் சாலையானது (Al Asayel Road) மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் அவசர வாகனங்களுக்கு மட்டுமே இந்த சாலையை உபயோகப்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல், ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு ஸ்ட்ரீட் (Sheikh Mohammed bin Rashid Boulevard street) அங்கிருக்கும் பார்க்கிங் முடிந்தவுடன் மாலை 4 மணி முதல் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தவொரு அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் முன்பதிவு உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு முன்னதாக தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு RTA அழைப்பு விடுத்துள்ளது.

அதே நேரத்தில், பைனான்சியல் சென்டர் சாலை (Financial Center Road) மாலை 4 மணி முதல் மூடப்படும், என்றும் அல் சுகூக் ஸ்ட்ரீட் (Al Sukook Street) இரவு 8 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசினஸ் பே ஸ்ட்ரீட் ( Business Bay street) மற்றும் பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்களுக்கு (Financial Center street) இடையே அமைந்துள்ள ஃபியூசர் ஸ்ட்ரீட் (Future Street) மாலை 6-8 மணி வரை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக மூடப்பட்டு நிகழ்வு முடியும் வரையிலும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை புர்ஜ் கலீஃபா நிலையம் மூடப்படும் என்றும் RTA குறிப்பிட்டுள்ளது.

பாதசாரிகள் பாதுகாப்பான முறையில் ஷேக் சையத் சாலையைக் கடக்க அனுமதிக்க புர்ஜ் கலீஃபா மெட்ரோ நிலையம் அருகே உள்ள ஷேக் சையத் சாலையில் வழக்கமான பாதசாரி கடக்கும் பகுதி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!