அமீரக செய்திகள்

3 கிலோ தங்கம் பரிசு.. 2,000க்கும் மேலான பொருட்களுக்கு தள்ளுபடி.. குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு விழா..

74வது இந்திய குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனமான லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘இந்தியா உத்சவ்’ எனும் சிறப்பு விழாவின் 17வது பதிப்பை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வை ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் GCC-ல் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட்கள் முழுவதும் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, 2,000 க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி, பிரபலங்களின் வருகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள லூலூவின் அலுவலகம் மூலம் 2,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்பு பொருட்கள் வளைகுடா நாடுகளுக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ப்ரொமோஷன் அமீரகம் மற்றும் GCC இல் உள்ள அனைத்து லுலு ஹைப்பர் மார்க்கெட்களிலும் அரிசி, தானியங்கள், மசாலாப் பொருட்கள், இறைச்சிகள், சமைக்கத் தயாராக இருக்கும் தின்பண்டங்கள், மளிகைப் பொருட்கள், ஃபேஷன் போன்றவற்றில் தள்ளுபடியை வழங்கும் என்றும் இந்த சலுகைகள் நேரடியாக ஸ்டோரில் சென்று வாங்குபவர்கள், ஆன்லைனில் வாங்குபவர்கள் என அனைவருக்கமே கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, மார்ச் 18 வரை லூலூ ஸ்டோர்களில் அல்லது ஆன்லைனில் 100 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ராஃபிள் டிரா நடத்தப்பட்டு அதல் வெற்றி பெறும் 60 நபர்களுக்கு 3 கிலோ தங்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு வெற்றியாளரும் 50 கிராம் தங்கத்தை வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சஞ்சய் சுதிர் அபுதாபி நகரில் உள்ள அல் வஹ்தா மாலில் நடைபெற்ற தொடக்க விழாவில், “இந்த சிறப்பு நிகழ்வானது இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளின் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ” ‘லூலூ இந்தியா உத்சவ்’ இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான அன்பான உறவுகளை வர்த்தகம், உணவு வகைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் அழகாக வடிவமைக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லூலூ குரூப் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ருபாவாலா, இந்த விழா அவர்களின் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்றும் சமூக உறுப்பினர்களிடமிருந்து பெரிதான ஈடுபாட்டைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியர்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களில் இருந்து ஃபேஷன் வரை ஷாப்பிங் செய்வதற்கான முக்கிய இடமாக லூலூ இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!